தமிழ்நாடு:
- 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்; 9,10,024 மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர்.
- பாஜகவும் வாக்களிப்பது அவமானம்; எதிர்கால சந்திக்கும் செய்யும் துரோகம் - முதலமைச்சர் ஸ்டாலின்.
- திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ் அறிவிப்பு.
- விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தாரகை கதபர்ட் வேட்பாளராக அறிவிப்பு.
- நாம் தமிழர் கட்சிக்கு தீப்பெட்டி அல்லது கப்பல் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தின் சீமான் மனு.
- வாளி, பலா, திராட்சை சின்னத்தில் ஒன்றை ஒதுக்க தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் மனு.
- இராமநாதபுரம்: ஓபிஎஸ் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் மற்றொரு வேட்பாளர் போட்டி.
- தென்சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வேட்புமனு தாக்கல்.
- சேலம் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனுத் தாக்கல்.
- சென்னை கிண்டியில் சோதனையில் பிஸ்கட் ஏஜென்சி ஊழியர்களிடம் ரூ. 40 லட்சம் பறிமுதல்.
- கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறிய 3 பேர் கடந்த இரண்டு நாட்களில் உயிரிழப்பு.
- விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் வேட்புமனு தாக்கல்.
- நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
- இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை ஓபிஎஸ் அணுக தடையில்லை - உயர்நீதிமன்றம்.
- வேங்கைவயல்: 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள சிபிசிஐடிக்கு அனுமதி
இந்தியா:
- இந்தியாவை பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடாக மாற்றியுள்ளது பாஜக - காங்கிரஸ் குற்றச்சாட்டு.
- ஜே.என்.யூ மாணவர் சங்கத் தேர்தலில் 30 ஆண்டுக்குபின் பட்டியலின மாணவர் வெற்றி.
- தேர்தல் பத்திர பிரச்சனையை திசை திருப்பவே கெஜ்ரிவால் கைது - கேரளா முதல்வர் பினராயி விஜயன்.
- ஜனநாயத்தையும், அரசமைப்பு சட்டத்தையும் காப்போம் என ஆம் ஆத்மி கட்சி பிரச்சாரம்.
- கட்சி விளம்பரத்தில் இந்து கடவுள்கள் படம் - பாஜக மீது தேர்தல் ஆணையத்தில் மார்க்சிஸ்ட் புகார்.
- பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் சி.இ.ஓ டேவ் கால்ஹூன் பதவி விலகுகிறார்.
- சிக்கிம் மாநில சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் பிரேம்சிங் தமாங் 2 தொகுதிகளில் போட்டி.
- கங்கை, யமுனை மாசுபாடு: டெல்லி, உத்தரபிரதேசம், மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் பதிலளிக்க உத்தரவு.
- மக்களவை தேர்தலில் அனைத்து கட்சிகளும் மொத்தம் ரூ. 1 லட்சம் கோடி செலவிடும் என மதிப்பீடு.
- டெல்லி: கோவிந்த்புரியில் பாஜக தலைவர் ஜே.பி நட்டா மனைவிக்கு சொந்தமாக கார் திருட்டு.
உலகம்:
- தொடரும் பொருளாதார நெருக்கடி: இரண்டாவது கட்டமாக 8 லட்சம் ஆப்கானிய அகதிகளை திருப்பி அனுப்பும் பாகிஸ்தான்.
- சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்: 11 பேர் உயிரிழப்பு.
- காசா பகுதியில் உடனடி போர் நிறுத்தம்; ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்.
- உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி ஏவுகணை தாக்குதல் - 30 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.
விளையாட்டு:
- ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதல்.
- பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
- உலகக் கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று: இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மீண்டும் இன்று மோதல்.
- ஐபிஎல் தொடருக்கான முழு அட்டவணை வெளியான நிலையில், சென்னையில் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.