தமிழ்நாடு:
- திமுக ஆட்சியில் போதை பொருட்கள் புழக்கம் அதிகமாகி விட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு
- கோடை காலத்தில் தடையில்லாமல் குடிநீர் வழங்குவது தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை
- தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெப்பம் - உடனடியாக வெப்ப தணிப்பு திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்
- தமிழகத்தில் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை - அகில இந்திய அளவில் வெப்பநிலையில் 3வது இடம் பிடித்தது ஈரோடு
- மதுரையில் சித்திரை திருவிழா - பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் - லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு
- தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோயில்களில் சித்ரா பௌர்ணமி விழா கொண்டாட்டம் கோலாகலம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
- பாலியல் தொல்லை புகாரில் கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித்தை கைது செய்த போலீசார்
- வெள்ளியங்கிரி 7வது மலையில் இருந்து விழுந்த திருப்பூரைச் சேர்ந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
- பிரதமர் மோடியின் மத வெறுப்பு பிரச்சாரம் ஏற்புடையது அல்ல - எடப்பாடி பழனிசாமி அறிக்கை
- அனைத்து வகுப்பு பள்ளி தேர்வுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று முதல் கோடை விடுமுறை அறிவிப்பு
- அண்டை மாநிலங்களில் பறவை காய்ச்சல் எதிரொலி - தமிழகத்தில் நோய் தடுப்பு பணிகள் திவீரம்
- பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்காக ஒருங்கிணைப்பு குழுவை நியமித்து உயர்கல்வித்துறை நடவடிக்கை
- சென்னை பள்ளிக்கரணையில் கணவன் ஆணவ கொலை - துக்கம் தாளாமல் 2 மாதத்தில் மனைவி தற்கொலை
- துணைவேந்தர் இல்லாமல் செயல்படும் சென்னை பல்கலைக்கழகம் - சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி
- திருவண்ணமலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் - சிறப்பு ஏற்பாடுகளை செய்த மாவட்ட நிர்வாகம்
இந்தியா:
- விவிபேட் இயந்திரங்களில் உள்ள சீட்டுகளை சரிபார்க்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
- நாட்டை உடைக்க காங்கிரஸ் கட்சி முயற்சிப்பதாக பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு
- மத வேறுபாடின்றி ஒவ்வொருவருக்கும் நீதி வழங்குவது தான் காங்கிரஸ் கட்சியின் நோக்கம் என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பதிலடி
- தமிழக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரிய மனுவை ஜூலை 16க்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்
- மக்களவை தேர்தலின் 3ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு - 96 தொகுதிகளில் 1,351 பேர் போட்டி
- பிரதமர் மோடி மத அரசியல் எல்லாம் செய்தது இல்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து
- டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கு - அரவிந்த் கெஜ்ரிவால், கவிதா நீதிமன்ற காவல் நீட்டிப்பு
- பாங்காக்கில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தில் அரிய வகை அனகொண்டா பாம்புகளை கடந்தி வந்த பயணி
- அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 8 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்க்குப்பதிவு நடைபெறுகிறது.
உலகம்:
- கனமழை, வெள்ளம் பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டது துபாய் - விமான போக்குவரத்து வழக்கம்போல இயக்கம்
- இந்தோனேசியாவில் உள்ள இஜென் எரிமலையை காண சென்ற இளம்பெண் தவறி விழுந்து உயிரிழப்பு
- தைவானில் கடந்த 24 மணி நேரத்தில் 240 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் - பொதுமக்கள் பீதி
- சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தவர்களை ருவாண்டா நாட்டுக்கு மாற்றும் மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
- மலேசியாவில் ஒத்திகையின் போது ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து - 10 பேர் உயிரிழப்பு
- பாகிஸ்தானில் இருந்து வந்த அரிசியில் நுண்ணுயிர் கண்டுபிடிப்பு - இறக்குமதி செய்ய தடை விதித்த ரஷ்யா
விளையாட்டு:
- ஐபிஎல் 2024: சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2வது முறையாக லக்னோ அணி வெற்றி
- ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதல்
- டி20 கோப்பையில் விளையாட அறிவுரை - மூடிய கதவு மீண்டும் திறக்கப்படாது என சுனில் நரேன் பதில்