தமிழ்நாடு:



  • பத்தாண்டு கால பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • சென்னையில் மோடி, அண்ணாமலை, பால் கனகராஜ் உருவங்கள் பொறித்த தமிழ் புத்தாண்டு வாழ்த்து அட்டைகள் பறிமுதல்.

  • தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக ஈரோடு தொகுதி தமாகா வேட்பாளர் விஜயகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு.

  • அரியலூர் அருகே செந்துறை பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 24 சிசிடிவிக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

  • கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அடுத்த செல்லம்பட்டி கிராமத்தில் பாஜக பிரசாரத்தின்போது பாமக நிர்வாகி மண்டை உடைப்பு.

  • மக்களவை தேர்தல் 2024: தமிழ்நாட்டில் இதுவரை 4.36 கோடி பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல்.

  • கோவையில் தேர்தல் விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாக அண்ணாமலை மீது வழக்குப்பதிவு.

  •  ராகுல் அவர்களே வருக, புதிய இந்தியாவுக்கு விடியல் தருக என முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

  • தமிழ்நாட்டின் வாயிலாக இந்தியாவை புரிந்து கொள்கிறேன் - நெல்லையில் மனம் திறந்த ராகுல் காந்தி

  • எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும் வேண்டாம், தெருக்கோடியில் நின்று மக்களுக்காக போராடுவேன் - சீமான்

  • தமிழகத்தில் இன்று ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

  • மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று கோலாகலமாக தொடங்கியது.


இந்தியா: 



  • மோடிக்கு தோசை பிடிக்குமா இல்லை, வடை பிடிக்குமாங்கிறது தமிழர்களுக்கு பிரச்னை இல்லை - ராகுல் காந்தி சரமாரி கேள்வி

  • கிளாக்கோமா நோயால் இந்தியாவில் 1.2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • நீட் தேர்வை அந்தந்த மாநில அரசுகளின் முடிவுகளுக்கே விட்டுவிடுகிறோம் என நெல்லை பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

  • பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டுவந்த இரண்டு முக்கிய குற்றவாளிகளை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். 

  • எமர்ஜென்சி காலத்தில் அம்மாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள பரோல் கூட கிடைக்கவில்லை என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

  • இந்து மதத்தில் இருந்து பௌத்தம், சமணம், சீக்கிய மதத்திற்கு மாற தங்களின் முன் அனுமதி தேவை என குஜராத் அரசு தெரிவித்துள்ளது.

  • ஹரியானாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 6 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உலகம்: 



  • பயங்கரவாதிகளை கண்டறிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது இஸ்ரேல்.

  • வருகின்ற செப்டம்பர் மாதத்தில் 4 நாடுகளுக்கு போப் பிரான்சிஸ் பயணம் - வாடிகன் அறிவிப்பு.

  • காசாவில் இஸ்ரேலின் ராணுவ செயல்பாடுகள் மீதான அதிருப்தி இருந்தபோதிலும், தனது நட்பு நாடான இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்குவதாக ஜோ பைடன் கூறியுள்ளார்.

  • மாலத்தீவில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக இந்தியாவில் ரோடு ஷோ நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

  • பிலிப்பைன்சில் ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து 2 பேர் உயிரிழப்பு. 


விளையாட்டு: 



  • ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று பலப்பரீட்சை.

  • ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. 

  • பாரீஸ் 2024 ஒலிம்பிக் தொடரின் இந்திய குழுவின் தலைவர் பதவியை பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ராஜினாமா செய்துள்ளார்.

  • வெற்றியை விடவும் நேர்மையாக விளையாடுவதுதான் முக்கியம் என இளம் வீரர்களிடம் தோனி கூறியதாக மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.