தமிழ்நாடு:



  • தமிழ்நாட்டில் ராம நவமி யாத்திரைக்கு அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூர் நாடாளுமன்ற தொகுதியில் 54 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

  • மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

  • பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருந்தனர்.

  • தேர்தலில் போட்டியிட அனுமதிக்காததால் கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி குமார் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

  • தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காக எப்போதும் முன்னே நிற்கும் ஆட்சி தி.மு.க. ஆட்சி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மணல் கொள்ளையில் ஈடுபட்டு ரூ.4 ஆயிரம் கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது திமுக என வேலூரில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

  • தேர்தல் காலங்களில் மட்டும் தமிழ்நாட்டில் பிரதமர் மோடி வட்டமடிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

  • ராகுல் காந்தி வருகையை ஒட்டி நெல்லையில் இன்று முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 


இந்தியா: 



  • சட்டை பட்டன் அணியாத காரணத்தால் பெங்களூரு மெட்ரோ ரயிலில் பயணிக்க இளைஞர் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

  • மகாராஷ்ட்ராவில் தொழிற்சாலை ஊழியர்கள் சாப்பிட்ட சமோசாவில் ஆணுறை இருந்ததை தொடர்ந்து 5 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

  • டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ராஜ்குமார் ஆனந்த், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

  • ராம்தேவ் தனது மன்னிப்பு பிரமாணப் பத்திரத்தில் மோசடி செய்ததாக, உச்சநீதிமன்றம் சாடியுள்ளது.

  • சத்தீஸ்கரில் சுரங்க பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 12 பேர் உயிரிழப்பு

  • பரபரக்கும் தேர்தல் களம்: மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை தமிழ்நாடு வருகிறார்.

  • இந்தியாவை உடைக்க வடக்கு - தெற்கு பிரிவினையை காங்கிரஸ் உருவாக்குகிறது - அமித்ஷா

  • அரசியல் கட்சிகள் வைக்கும் பேனர்களில் அச்சகத்தின் பெயர் இடம்பெற வேண்டும் - தேர்தல் கமிஷன் உத்தரவு.

  • உத்தரபிரதேசத்தில் 3 பாஜக எம்.பிக்களுக்கு சீட் மறுப்பு.

  • பீகாரில் ராஷ்டிரீய ஜனதாதள வேட்பாளர்கள் அறிவிப்பு; லாலு பிரசாத்தின் 2 மகள்களுக்கு வாய்ப்பு.

  • சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு.


உலகம்: 



  • 'கடவுள் துகள்’ கண்டறிந்த, நோபல் பரிசு வென்ற இயற்பியல் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் காலமானார்.

  • இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மகன்கள் உயிரிழப்பு.

  • காஸா போரில் நெதன்யாகு தவறு செய்கிறார் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்


விளையாட்டு: 



  • பாரீஸ் ஒலிம்பிக்கில் தடகளத்தில் தங்கம் வெல்வோருக்கு ரூ. 41 1/2 லட்சம் பரிசு - உலக சம்மேளனம் அறிவிப்பு.

  • ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதல்.

  • 2027ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கு தென்னாப்பிரிக்காவில் 8 இடங்கள் தேர்வு.

  • ஐபிஎல் 2024: கடைசி பந்தில் இலக்கை எட்டி ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்