தமிழ்நாடு:
- பெண் சக்தி குறித்து பேசும் பிரதமர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி ஏன் பேசவில்லை - முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி
- வேலூர் மற்றும் கோவையில் இன்று பிரதமர் மோடி பிரச்சாரம், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்
- தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான் கொண்டாட்டம், நேற்று பிறை தென்படாததையடுத்து அறிவிப்பு வெளியானது
- பாஜக அரசால் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட துரோகங்களுக்கு துணைப்போனவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக அதிமுக தமிழ் இனத்திற்கு எதிரானவர்கள் - முதலமைச்சர் ஸ்டாலின் கடும் சாடல்
- சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை
- சென்னையில் ரோட் ஷோ மூலம் பிரதமர் மோடி வாக்கு சேகரிப்பு, சென்னை மனதை வென்றுவிட்டதாக பிரதமர் மோடி உருக்கம்
- உடல் நலக்குறைவால் உயிரிழந்த ஆர்.எம். வீரப்பணுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் நேரில் அஞ்சலி
- பிரதமர் மோடியிடம் நாட்டை கொடுத்தால் இந்தியாவை மறந்துவிட வேண்டும் - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் விமர்சனம்
- கரூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை, வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும் என தகவல்
- நாளை முதல் இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டம் மற்றும் தென் மாவட்டங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு -வானிலை மையம்
- வேதாரண்யம் அருகே வாழைப்பழம் வீசும் வினோத திருவிழா, வாழைப்பழத்தை ஆர்வத்துடன் எடுத்துச் சென்ற பக்தர்கள்
- சென்னையில் ஐபிஎல் தொடர் - 7 நாட்களுக்கு சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்
- கோடை விடுமுறை முன்னிட்டு சென்னை - நெல்லை வரை சிறப்பு ரயில் இயக்கம்
இந்தியா:
- மதுபான கொள்கை வழக்கில், முதலமைச்சர் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி, கைது சட்ட விரோதமானது அல்ல என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் திட்டவட்டம்
- டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து உச்சநீதிமன்றம் நாட உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு
- நிலவில் இருந்து மாதிரிகளை எடுத்து பூமிக்கு திரும்பும் சந்திரயான் - 4 திட்டம் இருக்கும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி
- குஜராத்தில் பாவ் நகரில் நேற்று இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது
- மோடி ஆட்சியில் ஒரு அங்குள நிலம் கூட ஆக்கிரமிக்க முடியாத சீன பின்வாங்கியது - அமித்ஷா பேச்சு
- சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு
- தெலங்கானாவில் 106 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த தேர்தல் ஆணையர், கட்சி கூட்டத்தில் பங்கேற்றதால் நடவடிக்கை
உலகம்:
- அமெரிக்க வருடாந்திர விண்வெளி கருத்தரங்க கூட்டத்தில் சந்திரயான் 3 குழுவிற்கு விருது
- காசாவில் ரபா நகரை கைப்பற்றியே தீருவோம் - இஸ்ரேல் பிரதமர் சூளுரை - அமெரிக்க எதிர்ப்பு
- கனடா: இந்திய வம்சாவளி தொழிலதிபர் மற்றும் 2 பேர் சுட்டுக்கொலை
விளையாட்டு:
- ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணி இன்று மோதல்
- நியூசிலாந்து எதிரான டி20 கிரிகெட் போட்டி: பாகிஸ்தான் அணியில் முகமது அமீர், இமாத் வாசிம் சேர்ப்பு