Chhattisgarh Bus Accident: சத்திஸ்கரில் பேருந்து விபத்தில் பலியானவர்களுக்கு குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட இரங்கல் தெரிவித்துள்ளனர்,
விபத்தில் 12 பேர் பலி:
துர்க் மாவட்டத்தில் கும்ஹாரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காப்ரி கிராமத்திற்கு அருகே இரவு 8:30 மணியளவில், ஒரு தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 40 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் கவிழ்ந்தது. தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
20-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டும் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் 12 பேர் சிகிச்ச பலனின்றி உயிரிழந்தனர். 14 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். காயமடைந்து ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை துணை முதலமைச்சர் விஜய் ஷர்மா நேரில் சந்தித்து நலர் விசாரித்தார்.
தலைவர்கள் இரங்கல்:
விபத்து தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் பேருந்து விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்த அனைத்து குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்! காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “சத்தீஸ்கர் மாநிலம் துர்க்கில் நடந்த பேருந்து விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இதில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்துடன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் விரும்புகிறேன். அரசின் மேற்பார்வையில். அரசாங்கம், உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லா வழிகளிலும் உதவுவதில் ஈடுபட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். இதேபோன்று, சத்திஸ்கர் முதலமைச்சரும் தனது இரங்கல டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.