தமிழ்நாடு:



  • முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான சாந்தன் காலமானார்.

  • ரூ. 10,417.22 கோடி மதிப்பிலான திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

  • 10 ஆண்டு பாஜக ஆட்சியில் விவசாயிகள் மீதான அடக்குமுறை மனித உரிமை மீறல் என ப.சிதம்பரம் குற்றச்சாட்டு.

  • அதிமுக கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பல்லடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்.

  • தலைகீழாய் நடந்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவால் காலூன்ற முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேச்சு.

  • பாலாற்றில் அணை கட்ட ஆந்திர அரசு அடிக்கல் என வெளியான தகவலுக்கு அமைச்சர் துரைமுருகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

  • தென்காசி: ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்த தம்பதிக்கு ரூ. 5 லட்சம் வெகுமதி அளித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

  • இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

  • வடலூரில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை சத்திய ஞான சபை பொதுவெளியில் அமைக்க கூடாது என்று அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்போது விவசாயிகள் செழிப்படைவார்கள் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி


இந்தியா: 



  • கர்நாடகா: மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் காங்கிரஸில் 3 பேர், பாஜகவில் ஒருவர் வெற்றிபெற்றுள்ளனர்.

  • இமாச்சல பிரதேசத்தில் பாஜகவின் சதியால் காங்கிரஸ் வேட்பாளர் அபிஷேக் மனு தோற்கடிப்பு என புகார்.

  • தெலங்கானா: ரூ. 500க்கு சிலிண்டர் உள்பட 2 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியது காங்கிரஸ்.

  • சத்தீஸ்கர்: பீஜப்பூர் மாவட்டத்தில் துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.

  • டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 8வது முறையாக மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

  • கொரோனா காலத்தில் உயர்த்திய பயணிகள் ரயில் கட்டணம் 4 ஆண்டுக்கு பின் குறைக்கப்பட்டுள்ளது.

  • குடியிரிமை திருத்த சட்டத்தை வரும் மக்களவை தேர்தலுக்குள் அமல்படுத்த மத்திய அரசு திட்டம் என தகவல். 


உலகம்: 



  • உக்ரைனுக்கு படைகளை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என நேட்டோ பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

  • பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேல் தூதரகம் முன் தீக்குளித்த அமெரிக்க ராணுவ வீரர் உயிரிழப்பு.

  • நேட்டோ அமைப்பில் ஸ்வீடன் இணைவதற்கு ஹங்கேரி நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

  • ஆப்கானிஸ்தானில் பொது இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றம் - தாலிபன்கள் மீண்டும் அட்டூழியம்

  • ஜப்பான்: ஷிகோகுவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு.

  • இஸ்ரேல் - காஸா இடையே அடுத்த வாரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் - ஜோ பைடன் நம்பிக்கை.

  • தென் அமெரிக்க நாடான பெருவில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு - சுகாதார அவசர நிலை பிரகடனம் 


விளையாட்டு: 



  • டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் மட்டுமின்றி போனஸ் தொகையும் வழங்க பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளதாக தகவல்

  • நமீபியா வீரர் ஜான் நிகோல் லோப்டி ஈட்டன் 33 பந்துகளில் சதம் அடித்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

  • ஹாக்கி இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து எலினா நார்மன் ராஜினாமா செய்தார்.

  • அறுவை சிகிச்சை செய்துள்ள இந்திய அணி வீரர் முகமது ஷமி விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தியுள்ளார்.