தமிழ்நாடு:
- அரசு மற்றும் அரசியல் பயணமாக இன்று தமிழநாடு வருகிறார் பிரதமர் மோடி; என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். பாதுகாப்பு தீவிரம்
- பிரதமர் மோடி நாளை தூத்துக்குடி வரவுள்ளதால் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
- பிரதமருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க முடியவில்லை; அவசரமாக டெல்லி செல்லவேண்டிய சூழல் உள்ளது - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை
- மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தை கலைஞரின் தாஜ்மகால் என வர்ணித்தார் ரஜினிகாந்த்.
- கீழடியில் நடத்தப்பட்ட முதல் 2 கட்ட அகழாய்வு குறித்த அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு
- நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை ஓரிரு வாரத்தில் அறிவிப்போம் - பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
- சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை” என்று தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் குறித்து இயக்குநர் அமீர் விளக்கம்
- பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஒன்றரை ஆண்டிற்கு மேலாக அப்பகுதி மக்கள் போராடி வருவதால், அரசு அம்மக்களின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும் - சீமான்
- பாஜகவுக்கு தாவிய விஜயதாரணி; காலி என அறிவிக்கப்பட்ட விளவங்காடு தொகுதி - தேர்தல் ஆணையம்
- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடக மற்றும் செய்திதொடர்பு பிரிவின் தலைவராக பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் நியமனம்
- மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட துணை ராணுவம் தமிழ்நாடு வருகிறது - தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
- தமிழ்நாட்டில் 34 ரெயில் நிலையங்களை மேம்படுத்த அடிக்கல் நாட்டிய பிரதமருக்கு நன்றி - ஆளுநர் ஆர்.என்.ரவி
- பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க ஆந்திரா தீவிரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தடையாணை பெற வேண்டும் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
- திருவள்ளூர் சீமாவரம் சுங்கச்சாவடி அருகே லாரி மீது கார் மோதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் உயிரிழந்தார்
இந்தியா:
- நாடு முழுவதும் 554 ரெயில் நிலையங்களை உலகத்தரத்தில் மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதில் 34 ரயில் நிலையங்கள் தமிழ்நாட்டைச் சார்ந்தவை
- பாலாற்றின் குறுக்கே தடுப்பணை. ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு
- கேரளாவில் 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது இந்திய கம்யூனிஸ்ட்- வயநாட்டில் டி.ராஜா மனைவி ஆனி ராஜா போட்டி
- பிரபல பாடகர் பங்கஜ் உதாஸ் மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
- மராத்தா இட ஒதுக்கீடு.. 17 நாட்களுக்கு பிறகு உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் மனோஜ் ஜரங்கே
- ஜார்கண்ட் காங்கிரஸ் எம்.பி. கீதா கோரா பா.ஜ.க.வில் இணைந்தார்
- அக்பர், சீதா என சிங்கங்களுக்கு பெயர் வைத்த வன அதிகாரி சஸ்பெண்ட்
- பாகிஸ்தானுக்கு ராவி நதி நீர் வழங்குவதை நிறுத்திய இந்தியா; இதனால் ஜம்மு காஷ்மீருக்கு கூடுதலாக ஆயிரத்து 150 கன அடி நீர் கிடைக்கும்.
உலகம்:
- பாலஸ்தீனத்தை விடுதலை செய்ய வேண்டுமென கோரி இஸ்ரேல் தூதரகம் முன் தீக்குளித்த அமெரிக்க விமானப்படை வீரர் உயிரிழப்பு
- காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல் எதிரொலியாக பாலஸ்தீன பிரதமர் பொறுப்பை ராஜினாமா செய்தார் முகமது ஷ்டய்யே
- ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 5.1 ஆக பதிவு
விளையாட்டு
- இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் 4 போட்டிகள் முடிந்தது. தற்போது இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதுடன் தொடரையும் கைப்பற்றியது.
- மகளிர் பிரிமியர் லீக்; உ.பி. வாரியர்ஸை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாலய வெற்றியை பெற்ற டெல்லி
- ஐபிஎல் கோப்பையை பெங்களூரு அணி வெல்ல வேண்டும் - சுரேஷ் ரெய்னா விருப்பம்