தமிழ்நாடு:



  • விருதுநகர் பட்டாசு குடோன் தீ விபத்து; 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு; பிரதமர், முதலமைச்சர் நிதிஉதவி அறிவிப்பு

  • தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய்க்கு தடை; புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பதால் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

  • தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்; காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஸ்குமார் நியமனம். 

  • பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்து நடப்பதை தடுக்க அரசு கண்காணிப்பை தீவிரமாக்க வேண்டும் - அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்

  • இன்று திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளது. 

  • பல்வேறு துறைகளின் சார்பில் ந்ரூபாய் 732 கோடி அளவிலான திட்டங்களுக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்

  • கர்நாடகாவால் மேகதாது அணை கட்ட முடியாது - அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்

  • மேகதாது அணை கட்ட கர்நாடகா நிதி ஒதுக்கீடு - எடப்பாடி பழனிசாமி கண்டனம் 

  • மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்ட வேண்டும். அவர் இருந்தவரை நீட் தமிழ்நாட்டிற்கு வரவில்லை - அமைச்சர் உதயநிதி. 

  • தமிழ்நாட்டில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களுக்கு பறவைக்காய்ச்சல் எச்சரிக்கை

  • குரூப்-2 நேர்காணல் பணியிடங்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியீடு

  • வடலூர் வள்ளலார் பெருவெளியை திமுக அரசு கையகப்படுத்த முயற்சி செய்தால் மாபெரும் மக்கள் பேராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்


இந்தியா:



  • புதுடெல்லியில் நடைபெறும் 9-வது ரெய்சினா பேச்சுவார்த்தையில் சிறப்பு விருந்தினராக கிரேக்க பிரதமர் கிரியகோஸ் மித்சோடாகிஸ் பங்கேற்கவுள்ளார். 

  • கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் வனவிலங்குகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம். கடந்த 20 நாட்களில் காட்டு யானை தாக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு; பொதுமக்கள் போராட்டம்

  • மராட்டிய மாநிலம்: பா.ஜ.க. முன்னாள் எம்.பி. நிலேஷ் ராணே கார் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல்

  • மும்பை விமான நிலையத்தில் வீல் சேர் இல்லாததால் பயணி உயிரிழந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் நோட்டீஸ்

  • தெலுங்கானா மாநிலம் மஹபூப்நகர் பகுதியில் உள்ள பொன்னாகால் என்ற கிராமத்தில் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் சுமார் 20 தெருநாய்களை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்

  • நாடு முழுவதும் பாஜகவின் எழுச்சிக்கு மோடியே காரணம் - ஜே.பி. நட்டா பெருமிதம்

  • வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்த அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் - விவசாயிகள் சங்கத் தலைவர் சர்வன் சிங் பந்தர்

  • சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவை என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கருத்து


உலகம்:



  • 3 ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த மந்திரிகளுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

  • உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள், வீரர்களுக்கு பயிற்சி; பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்

  • அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப், தனது வணிக நிறுவனம், மகன்கள், ஊழியர்களின் சொத்து மதிப்புகள் மற்றும் நிதி விவரங்கள் குறித்து தவறான தகவல் அளித்தாக தொடரப்பட்ட வழக்கில் 354 மில்லியன் டாலர் அபராதம்; 3 ஆண்டுகள் வணிகம் செய்யவும் தடை 

  • 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா இன்று விடுதலை செய்யப்படுவார் என தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் அறிவிப்பு


விளையாட்டு:



  • இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தல்

  • இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் சேர்ப்பு; இந்தியா தற்போது 322 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 

  • தமிழ் தலைவாஸ் அணி இந்த சீசனில் தனது கடைசி போட்டியில் இன்று விளையாடுகின்றது. ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பினை இழந்த தமிழ் தலைவாஸ் அணி பெங்கால் வாரியர்ஸுடன் இரவு 8 மணிக்கு மோதுகின்றது.