தமிழ்நாடு:
- போக்குவரத்து ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை அறிவித்த தமிழ்நாடு அரசு, 200 நாட்கள் அல்லது அதற்கு மேல் பணியாற்றியவர்களுக்கு ரூ.625 வழங்கப்படும்
- வெளிநாட்டில் உயிரிழந்தவர்களின் உடலை 10 நாட்களுக்குள் தமிழகம் கொண்டு வர அரசு நடவடிக்கை, அயலக தமிழர் விழாவில் அமைச்சர் உதயநிதி பேச்சு
- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க இந்த ஆண்டு 6000 த்துக்கும் மேற்பட்ட காளைகள் பதிவு, அமைச்சர் மூர்த்தி பேச்சு
- வரும் 15 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை வலுவடையும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்
- தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உடன் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சந்திப்பு; கல்வி, தொழில்நுட்பம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்
- பொங்கல் பண்டிகை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்; அனைத்து எஸ்.ஈ.டி.சி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்
- மதுரையில் ஆட்டோமேடிக் லாக் பூட்டிக்கொண்டதால் ஒன்றரை மற்றும் 3 வயது குழந்தைகள் சிக்கித் தவிப்பு, தீயணைப்பு துறையினர் ஜன்னல் கம்பு உடைத்து குழந்தைகளை மீட்டனர்
- நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்; குறுக்குத்துறை முருகன் கோயிலை சூழ்ந்து கல்மண்டபங்களை மூழ்கடித்தது
இந்தியா:
- வரும் 31 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளதாக தகவல்.. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேச உள்ளார்.
- இந்தியாவின் மிக நீண்ட பாலமான அடல் பாலத்தை இன்று நாட்டுக்கு அர்ப்பனிக்கிறார் பிரதமர் மோடி
- அஜ்மீர் தர்காவில் உரூஸ் நிகழ்ச்சியில் சமர்பித்த சால்வையை அன்பளிப்பாக வழங்கிய பிரதமர் மோடி இஸ்லாமிய பிரதிநிதிகளை சந்தித்து நேரில் வாழங்கினார்
- அயோத்யா ராமர் கோயிலுக்கு வந்த 108 அடி உயர ஊதுவத்தி பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
- ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துக்கொள்ள மறுத்த காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினரை கண்டித்து பாஜக போஸ்டர், சனாதனத்துக்கு எதிரான கூட்டணி என விமர்சனம்
- வெள்ள பாதிப்புகள் தொடர்பாக தமிழக எம்.பிக்களை நாளை சந்திக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிவாரண தொகை வழங்கிட வலியுறுத்தப்போவதாக தகவல்
உலகம்:
- ஆட்கொல்லி வைரஸாக நிபா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்; அமெரிக்காவின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அறிவிப்பு
- ஓமன் கடலில் எண்ணெய் ஏற்றிச் சென்ற அமெரிக்காவின் ‘செயின்ட் நிக்கோலஸ்’ சரக்கு கப்பலை பறிமுதல் செய்த ஈரான்
- மாலத்தீவு உள்விவரங்களில் பிற நாடுகள் தலையிடுவது ஏற்க முடியாது - சீனா
- அமெரிக்காவின் மாண்ட்கோமெரி நகரின் மேயராக பதவியேற்ற முதல் இந்திய - அமெரிக்க பெண்; நியுஜெர்ஸி மாகாணத்தின் வரலாற்றில் இது ஒரு முக்கியமான நாள் என நீனா நிங் பேச்சு
விளையாட்டு:
- மலேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி: அஸ்வினி - தனிஷா ஜோடி காலிறுத்திக்கு முன்னேற்றம்
- தமிழ்நாடு கைப்பந்து லீக் போட்டி: இறுதி போட்டியில் சென்னை ராக்ஸ்டார்ஸ், கடலூர் அணிகள் இன்று மோதல்
- மலேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி: சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி காலிறுத்திக்கு முன்னேற்றம்