தமிழ்நாடு:



  • ஜெர்மனியில் நடைபெற்ற சமையல் ஒலிம்பிக்கில் சென்னைஸ்  அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் 3 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்று  சாதனை படைத்துள்ளனர். 

  • செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மொழி தொழில்நுட்பத்திற்காக நாட்டிலேயே முதன் முதலாக ’கணித்தமிழ் மாநாடு’ நடத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாரட்டியுள்ளார். 

  • செங்கல்பட்டில் பரனூர் சுங்கச்சாவடியை மூட வலியுறுத்தி அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  • தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  • மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் தர வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

  • முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மேல்முறையிட்டு வழக்கில் இறுதி தீர்ப்பு 12 ஆம் தேதி வழங்கப்படுமென விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

  • கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு செம்மொழி பூங்காவில் 10 நாள் பிரமாண்ட மலர் கண்காட்சி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

  • ஜெயலலிதா எப்போ இறப்பார் என காத்திருந்த எடப்பாடி - ஓ.பன்னீர்செல்வம் 

  • கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மைவி3 நிர்வாகி தலைமையில் திடீர் முற்றுகை போராட்டம்: சக்தி ஆனந்தன் உட்பட 200 பேர் கைது

  • கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரம்: தமிழகத்தில் 27 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை


இந்தியா: 



  • கடந்த ஆண்டில் நன்கொடை மூலம் பாஜகவுக்கு ரூ.2361 கோடி வருவாய்; காங்கிரஸுக்கு கிடைத்ததை விட 5 மடங்கு அதிகம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை

  • யாருடைய குடியுரிமையும் பறிபோகாது; மக்களவை தேர்தலுக்கு முன்பாக சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படும் - அமித்ஷா திட்டவட்டம்

  • திருநங்கைகள் உட்பட ஒதுக்கப்பட்ட மக்கள் மீது கவனம் செலுத்துவதாகவும், அவர்களில் 17,000 பேர் அடையாள அட்டைகளைப் பெற்றுள்ளனர் - மக்களவையில் பிரதமர் மோடியின் கடைசி உரை

  • மேற்கு வங்கத்தில் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவரை கைது செய்ய கோரி பெண்கள் போராட்டம் முற்றியதை தொடர்ந்து 144 தடை விதிக்கப்பட்டுள்ளது

  • மதிய உணவின்போது பிரதமர் மோடி, அவரது தினசரி பழக்க வழக்கங்கள் பற்றி எங்களிடம் பேசினார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டியளித்துள்ளார்.

  • இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருவதாக திமுக நாடாளுமன்ற குழு உறுப்பினர் டி.ஆர்.பாலு குற்றம்சாட்டினார்.


உலகம்:



  • ஆஸ்திரேலியாவில் இலங்கை அதிபருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு.

  • பாகிஸ்தான் தேர்தலில் வெற்றிபெற்ற 3 சுயேட்சை நவாஸ் ஷெரீப்பின் கட்சிக்கு ஆதரவு.

  • காசாவில் இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல் - 28 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு.

  • இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு


விளையாட்டு: 



  • அண்டர் 19 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா - ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை.

  • சென்னை ஓபன் டென்னிஸ்: ராம் குமார் - மைனெனி ஜோடி சாம்பியன்.

  • எஸ்.ஏ.20 ஓவர் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி இரண்டாவது முறையாக சாம்பியன்.

  • ப்ரோ கபடி லீக்: புனேரி புல்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இன்று களமிறங்குகிறது தமிழ் தலைவாஸ் அணி