தமிழ்நாடு:



  • ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்கள் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடரில் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றம் 

  • சட்டப்பேரவை சிறப்புக்கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும் மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைப்பு 

  • ஆளுநரை எம்.எல்.ஏ.க்கள் விமர்சித்ததை கண்டித்து சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரில் இருந்து பாஜக வெளிநடப்பு - மீன்வள பல்கலைக்கழகத்துக்கு இருந்த ஜெயலலிதா பெயரை மாற்றியதாக கூறி அதிமுகவும் வெளிநடப்பு 

  • திருச்செந்தூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து முருகன் கோயில்களிலும் கந்த சஷ்டி விழா கோலாகலம் - சூரனை ஜெயந்திநாதர் வதம் செய்த நிகழ்வை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை 

  • மருத்துவ கழிவுகளை கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை 

  • தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதி - வதந்திகளை நம்ப வேண்டாம் என தலைமைக்கழகம் அறிக்கை 

  • கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் நவம்பர் 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவிப்பு 

  • உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியை காண சென்னை மெரினா, பெசண்ட் நகர் கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு - ரசிகர்கள் மகிழ்ச்சி 

  • இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 22 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக தகவல் - படகுகளுக்கு இழப்பீடு அளிக்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மீனவர்கள் வலியுறுத்தல் 

  • சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லாமல் 18 மாதங்களை நிறைவு செய்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி 

  • சட்டப்பேரவையை பொதுக்கூட்டம் நடைபெறும் இடமாக மாற்றக்கூடாது என பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் 


இந்தியா: 



  • காற்று மாசுபாடு சற்று குறைந்ததால் டெல்லியில் நாளை முதல் பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு 

  • ஹலால் முத்திரையிடப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய தடை - உத்தரப்பிரதேச அரசு அதிரடி உத்தரவு 

  • டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை தோற்கடிக்க முடியாது என பாஜகவுக்கு தெரியும் என அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து 

  • தெலங்கானா தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா மயங்கி விழுந்ததால் தொண்டர்கள் இடையே பதற்றம் 

  • உலகக்கோப்பை இறுதி  போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டு நாடு முழுவதும் சிறப்பு பிரார்த்தனை - போட்டி நடக்கும் அஹமதாபாத் மைதானத்துக்கு படையெடுக்கும் ரசிகர்கள் 

  • உலகக்கோப்பை இறுதி போட்டியை காண பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் வருகை - நரேந்திர மோடி மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் 

  • உலகக்கோப்பை இறுதி போட்டி நடைபெறும் நரேந்திர மோடி மைதானத்தில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு - கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிப்பு


உலகம்: 



  • மாலத்தீவில் இருக்கும் இந்திய படைகளை திரும்ப பெற வேண்டுமென மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூவிடம் புதிய அதிபர் முகமது மூயிஸ் வலியுறுத்தல் 

  • சிங்கப்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மலரஞ்சலி 

  • தைவான் அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை தேர்வு செய்வதில் சிக்கல் எழுந்துள்ளதால் பரபரப்பு 

  • பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சம் - ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவு 


விளையாட்டு



  • உலகக்கோப்பையை வெல்லப்போவது யார்? - இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல் 

  • ராகுல் டிராவிட்டிற்காக உலகக்கோப்பையை வெல்வது எங்கள் கடமை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா உறுதி 

  • டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் போபண்ணா - மேத்யூ எப்டென் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம் 

  • நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வங்கதேச அணியின் கேப்டனாக நஜ்முல் ஹூசைன் நியமனம்