தமிழ்நாடு:



  • தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது; பல்கலைக்கழகங்கள் தொடர்பான 10 மசோதாக்கள் மீண்டும் நிறைவேறுகிறது.

  • தமிழ்நாட்டில் ஒரு மாத காலத்திற்குள் மருத்துவர், செவிலியர்கள் உள்ளிட்ட 5,000 பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்

  • அனைத்து வகையான கார்களையும் போக்குவரத்து வாகனங்களாக பதிவு செய்ய அனுமதி - போக்குவரத்துத்துறை உத்தரவு

  • மாநில உரிமைகளை மதிக்காத மத்திய ஆட்சியாளர்களால் இந்திய அரசியலைப்பு சட்டத்திற்கு ஆபத்து - திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

  • எம்ஜிஎம் நிறுவன சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை 

  • விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று முதல் நூலகம் தாம்பரத்தில் திறந்து வைக்கப்படுகிறது; இதை புஸ்ஸி ஆனந்த் திறந்து வைக்கிறார். 

  • தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

  • சேலம் விமான நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும் என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  • தூத்துக்குடி சம்பவத்தில் அருணா ஜெகதீசன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த 21 மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இந்தியா: 



  • ஜம்முவில் 18 மணிநேரம் நடந்த துப்பாக்கி சண்டை ; 5 லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

  • இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளில் புகை பழக்கத்தால் ஆண்டுக்கு 13 லட்சம் பேர் உயிரிழப்பு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

  • பாஜக, காங்கிரஸ் இடையே கடும் பலப்பரீட்சை; மத்திய பிரதேசத்தில் 71%, சட்டீஸ்கரில் 67% வாக்குப்பதிவு

  • மத்திய அரசு அடுத்த 5 ஆண்டுகளில் 3 ஆயிரம் புதிய ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

  • நவீன இயந்திரங்களின் உதவி மூலம் 7வது நாளாக தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

  • வங்கக் கடலில் ’மிதிலி’ புயல் உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • யூசிஓ வங்கி வாடிக்கையாளர்கள் சிலரின் வங்கி கணக்கில் 820 கோடி ரூபாய் பணம் விழுந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

  • ராஜஸ்தானில் பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதியுதவியை அதிகரிப்பதாக பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.


உலகம்: 



  • பிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.7ஆக பதிவாகியுள்ளது.

  • காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் எங்கு இருந்தாலும் தாக்குதல் நடத்தப்படும் - இஸ்ரேல் ராணுவம் தகவல்.

  • எலான் மஸ்கின் வாழ்க்கை வரலாறு திரப்படமாக எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலில் இதுவரை, 11,500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 4,650 குழந்தைகளும் 3,145 பெண்களும் அடங்குவர்.

  • ஆஸ்திரேலியாவில் சீக்கியர் ஒருவர் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


விளையாட்டு: 



  • பாகிஸ்தான் அணியின் புதிய தேர்வுக் குழுத் தலைவராக அந்த அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  

  • நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இறுதிப் போட்டியில் வரலாற்றில் முதல் முறையாக இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.