7 AM Headlines: விடிந்ததும், ஒரு நிமிடத்தில் செய்திகள் அறியலாம்.. 7 மணி தலைப்புச்செய்திகள்..!
Headlines 7 AM: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கியச் செய்திகளை தலைப்புச் செய்திகளாக இங்கு பார்க்கலாம்.
Continues below advertisement

காலை 7 மணி தலைப்புச்செய்திகள்
தமிழ்நாடு:
Continues below advertisement
- முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு ஆங்கில இதழ் பாராட்டு: சிறந்த மாநிலங்கள் தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு முதலிடம்
- நல்ல பொருளாதார நிலையில் உள்ள கோயில்களில் சிறப்பு தரிசன கட்டணம் ரத்து: அமைச்சர் சேகர்பாபு
- அரசு பேருந்துகளில் சொந்த ஊர் செல்ல பொங்கல் பண்டிகைக்கு 15,000 பேர் முன்பதிவு: 800 பேருந்துகள் இயக்கம்
- மாநில அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெறுவோர் அடையாள ஆவணமாக ஆதாரை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து பொறியியல் கல்லூரிகளின் இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகள் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன
- அம்ருத் 2.0 திட்டம் மற்றும் மூலதன மானிய நிதியின் கீழ் இராமநாதபுரம், திண்டுக்கல் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 3 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- ஜனநாயக நாட்டில் மன்னரை போல் திமுக ஆட்சி நடைபெறுவதாகவும் தமிழகத்தில் எல்லா இடத்திலும் கஞ்சா கிடைக்கக்கூடிய வகையில் அரசு செயல்படுவதால் இது இது திராவிட மாடல் அரசு இல்லை எனவும் சி.வி. சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
- தமிழக அரசு 2023ம் ஆண்டுக்கான விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது.மொத்தம் 24 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
- ஆவின் பால் விலையை தொடர்ந்து நெய் விலையும் லிட்டருக்கு ரூ.50 உயர்வு
இந்தியா:
Just In
மயிலாடுதுறை DSP சுந்தரேசன்: பரபரப்பு குற்றச்சாட்டுகள்! தற்காலிக பணிநீக்கம் பரிந்துரை - அதிர்ச்சியில் காவல்துறை!
TVK Vijay: அதிமுக கூட்டணிக்கு விஜய் ரெடி! ராஜ்மோகன் அறிக்கை மறைமுகமாக சொல்வது என்ன?
இந்திய கடற்படையில் புதிய சாதனை! 'நிஸ்டார்' டைவிங் கப்பல்: ஆழ்கடல் மீட்பில் இந்தியாவின் அடுத்த கட்டம்!
வரும் 23ம் தேதி அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு
கண்குளிர, மனம் குளிர பண அலங்காரத்தில் அருள்பாலித்த அரியலூர் பெரியநாயகி அம்மன்
Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டம் நாளை மின் நிறுத்தம் - எங்கன்னு தெரியனுமா? விபரம் உள்ளே....!
- அடுத்த ஆண்டு மே 7 ம் தேதி நீட் தேர்வு; மே 21 முதல் 31 வரை கியூட் தேர்வு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
- மின்துறை சீரமைப்பு செய்தால் மட்டுமே அதிக கடன்; மாநிலங்களுக்கு மத்திய அரசு நிபந்தனை
- சபரிமலை அருகே சென்னை பக்தர்கள் வேன் கவிழ்ந்து 10 வயது சிறுமி பலி: 16 பேர் காயம்
- பிரதமர் நரேந்திர மோடியை ‘குஜராத்தின் கசாப்புக் கடைக்காரர்’ என விமர்சித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோவின் கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம்
- கடந்த 5 ஆண்டுகளில் 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
- சி.பி.எஸ்.இ. போன்றே போலி வலைதளம் மூலம் பண மோசடி செய்யும் கும்பலிடம் ஏமாற வேண்டாம் எனவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. எச்சரிக்கை
- உலகமே பாகிஸ்தானை பயங்கரவாதத்தின் மையமாக பார்க்கிறது என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
உலகம்:
- பிரான்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழப்பு.
- மலேசியா சுற்றுலா தலத்தில் நிலச்சரிவு - 21 பேர் உயிரிழப்பு.
- சீனாவில் புதிதாக 2,157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
- ஐ.நா. பெண்கள் உரிமை அமைப்பில் இருந்து ஈரான் நீக்கம்; வாக்கெடுப்பில் பங்கேற்காத இந்தியா
- 2023-ல் கொரோனா பரவல் உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது - உலக சுகாதார அமைப்பின் தலைவர்
விளையாட்டு:
- புரோ கபடி லீக்: இறுதிப்போட்டியில் ஜெய்ப்பூர் - புனே அணிகள் இன்று பலப்பரீட்சை
- ரஞ்சி கோப்பை தொடர்: தமிழ்நாடு - ஹைதராபாத் போட்டி டிராவில் முடிந்தது.
- உலக கோப்பை கால்பந்து: 3-வது இடத்திற்க்கான போட்டியில் குரோஷியா-மொராக்கோ இன்று மோதல்
- இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் : 3-ம் நாள் முடிவில் வங்காளதேச அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்துள்ளது.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.