தமிழ்நாடு:



  • தமிழ்நாடு முழுவதும் களைகட்டிய தீபாவளி பண்டிகை - புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து மக்கள் உற்சாக கொண்டாட்டம் 

  • தீபாவளி நாளில் சென்னையில் 148 இடங்களில் தீ விபத்து - யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தீயணைப்புத்துறை தகவல்

  • தீபாவளி முன்னிட்டு பட்டாசு வெடித்ததால் புகைமூட்டமாக மாறிய சென்னை - பல இடங்களில் காற்றின் தரம் மோசமான நிலைக்கு சென்றதால் மக்கள் அவதி

  • சென்னையில் பட்டாசு கழிவுகளை அகற்ற சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த மாநகராட்சி முடிவு

  • தீபாவளி பண்டிகை விடுமுறை எதிரொலியாக சுற்றுலாதளங்களில் மக்கள் கூட்டம் அலைமோதல் 

  • ராணிப்பேட்டை அருகே பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி உயிரிழப்பு 

  • திருப்பத்தூர் அருகே அரசு பேருந்து தனியார் பேருந்து மீது மோதல் - ஓட்டுநர்கள் மிகுந்த கவனத்துடன் பேருந்துகளை இயக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்

  • திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா இன்று தொடக்கம் - பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம் 

  • தீபாவளியை கொண்டாட சென்னையில் இருந்து 12 லட்சம் பேர் ரயில்களில் சொந்த ஊருக்கு பயணம் 

  • தமிழ்நாடு முழுவதும் டெங்கு கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் 

  • அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடிப்பு - சென்னையில் 118 பேர் போலீசார் வழக்குப்பதிவு

  • சிவகாசியில் நடப்பாண்டு மட்டும் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசுகள் விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் 


இந்தியா: 



  • அயோத்தியில் 2.23 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி தீபோஸ்தவ் எனப்படும் தீபத்திருவிழா கொண்டாட்டம் - புதிய ஆர்வத்தையும், உற்சாகத்தையும் பரப்பி உள்ளதாக பிரதமர் மோடி கருத்து

  • உத்தரகாண்டில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்த விபத்தில் உள்ளே சிக்கிய 40 பணியாளர்களை மீட்கும் பணி தீவிரம் 

  • காற்று மாசுபட்டால் அபாய நிலையில் உள்ள டெல்லியில் தடையை மீறி பட்டாசுகள் வெடிப்பு

  • சத்தீஸ்கரில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கட்டாய மதமாற்றத்துக்கு தடை விதிக்கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

  • இமாச்சலபிரதேசத்தில் உள்ள எல்லை பாதுகாப்பு படையினருடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி 


உலகம்: 



  • இந்திய பொருளாதாரம் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது - லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜெய்ஷங்கர் பேச்சு 

  • தோஷகானா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சொத்துகள் மீண்டும் ஒப்படைப்பு


விளையாட்டு: 



  • உலகக் கோப்பை  தொடரில் நெதர்லாந்து அணியை 160 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

  • உலகக் கோப்பை  தொடரில் நெதர்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் பந்து வீசிய இந்திய பேட்ஸ்மேன்கள் - கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி விக்கெட்டுகளை கைப்பற்றினர்

  • ஒருநாள் போட்டிகளில் இருந்து ஆப்கானிஸ்தான் வீரன் நவீன் உல்-ஹக் ஓய்வு - 20 ஓவர் போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் 

  • நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இருந்து வங்கதேசம் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கீன் அகமது விலகல் 

  • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர் - இங்கிலாந்து அணி அறிவிப்பு