தமிழ்நாடு:



  • பொங்கல் கருணைத்தொகையாக ரூ. 3000; கோயில் பணியாளர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு - முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு

  • சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்: சட்டப்பேரவை கூட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. 

  • ஜனவரி 13ம் தேதி முதல் 16 வரை துணிவு, வாரிசு திரைப்படங்களில் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி ரத்து: கட் அவுட், பேனருக்கு பால் அபிஷேகம் செய்ய தடை

  • தமிழ்நாடு சட்டப்பேரவையில் மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவேராவுக்கு இரங்கல்: நேற்றைய நாள் முழுவதும் ஒத்திவைப்பு

  • போதையில்லா மாநகரம்: சென்னையில் வெளிநாட்டு வியாபாரிகள் உள்பர 1,858 பேர் கைது

  • அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கும் ஆளுநர்- பொங்கல் அழைப்பிதழில் ‘தமிழ்நாடு’ புறக்கணிப்பு

  • திமுக ஆட்சி தமிழர்களுக்காக நடைபெறும் ஆட்சி - முதலமைச்சர் முக ஸ்டாலின் பேச்சு

  • சென்னையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி: மார்ச் 5ம் தேதி நடக்கிறது. 

  • வெளியானது துணிவு-வாரிசு திரைப்படங்கள்- உற்சாகத்தில் ரசிகர்கள்


இந்தியா: 



  • நடிகர்கள், அரசியல்வாதிகளின் போஸ்டர்களுடன் வருபவர்களை சபரிமலை கோயிலில் தரிசனம் செய்ய அனுமதிக்க கூடாது: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

  • இந்தியா - ஆஸ்திரேலியா வர்த்தக ஒப்பந்தத்தால் தமிழகத்தில் ஆயுத்த ஆடைகள் ஏற்றுமதி இரட்டிப்பாக வாய்ப்பு

  • மெட்ரோ தூண் கம்பிகள் விழுந்து பலியானோர் குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் நிவாரணம்- கர்நாடக அரசு, மெட்ரோ ரயில்வே கழகம் அறிவிப்பு

  • உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிருத்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி 

  • ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையை சீக்கியர்கள்புறக்கணிக்க வேண்டும் - பாஜக 

  • பெங்களூரு 2வது முனையத்தில் 15ம் தேதி முதல் விமானங்கள் இயக்கம். 

  • சர்வதேச அரங்கில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் முக்கிய பங்கையும் தனித்துவ இடத்தையும் வகித்து வருவதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். 


உலகம்:



  • கிரீஸ் நாட்டின் கடைசி மன்னரான கான்ஸ்டென்னின் மரணமடைந்தார்.

  • பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் 5 சதவீத செலவினத்தை குறைத்து கொள்ளுங்கள் - இலங்கை அமைச்சர்களுக்கு ரணில் விக்ரமசிங்கே உத்தரவு.

  • ராஜபக்சே சகோதரர்கள் கனடாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • பெருவில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - 17 பேர் பலி.

  • தென் கொரியாவில் 24 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரிப்பு


விளையாட்டு:



  • இலங்கை அணியை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி வெற்றி.

  • போர்ச்சுகல் கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக ராபர்டோ மார்டினெஸ் நியமனம்

  • இலங்கைக்கு எதிராக 9 வது சதமடித்து விராட் கோலி புதிய சோதனை.

  • கடந்த உலகக் கோப்பையைவிட சிறப்பாக ஆடுவோம் என்று இந்திய ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ் கூறினார்.