தமிழ்நாடு:



  • வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை குமரியை நெருங்க வாய்ப்புள்ளதாகவும் அதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


  • கார் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய 5 பேரையும் கோவை அழைத்துச் சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.




  • "மார்க்ஸ், அம்பேத்கர், பெரியாரின் அரசியலைதான் வி.சி.க. பேசுகிறது. ஹிந்து மதத்தில் இருக்கும் ஏற்றதாழ்வால் தான் யாரும் ஹிந்து மதத்தில் இணையவில்லை. பா.ஜ.க.வினர் சமத்துவத்தை பேசினால், விசிக அவர்களோடு கைகோர்க்க தயங்காது. எங்களுக்கும் அவர்களுக்கும் அரசியலும், கொள்கைகளிலும்தான் முரண்பாடு” என்று சமூக நல்லிணக்க மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.




  • தமிழகத்துக்கு மூக்கு வழியே செலுத்தும் தடுப்பூசி வழங்க வேண்டும் - மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை



  • பொங்கல் பரிசுத்தொகுப்பிற்கு கரும்பை கொள்முதல் செய்யாதது விவசாயிகளுக்கு செய்த மிகப்பெரிய துரோகம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


இந்தியா: 



  • இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகரித்தால் அதை கையாளும் வகையில் தயார் நிலையில் உள்ளோமா? என்பதை உறுதி செய்ய சுகாதார மையங்களில் பயற்சி சோதனை நடத்த மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது.

  • "உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிந்து, கைகளை அவ்வப்போது கழுவ வேண்டும்” என பிரதமர் மோடி இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.


  • மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 98ஆவது பிறந்தநாள் இன்று. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.




  • இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரபல மணல் சிற்பக் கலைஞர் தக்காளிகளைக் கொண்டு உருவாக்கிய உலகின் மிகப்பெரும் சாண்டாகிளாஸ் சிற்பம் கவனம் ஈர்த்துள்ளது.




உலகம்: 




  • அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயல் சிக்கி 18 பேர் உயிரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.



  • ஆப்கனிஸ்தானில் பெண்களுக்கு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலவும் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.


  • இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதராக இருந்த இந்திய-அமெரிக்க வழக்கறிஞர்  ரிச்சர்ட் வர்மாவை வெளியுறவுத்துறையின் உயர்மட்ட  பதவிக்கு அமெரிக்க அதிபர் பரிந்துரைத்துள்ளார்.