அனைத்து வகை பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி வரியும், மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு ஜி.எஸ்.டி வரி விலக்கும் அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 


53வது ஜி.எஸ்,டி கூட்டம்:


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 53வது ஜி.எஸ்.டி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டது. 


 



இக்கூட்டத்திற்கு பிறகு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "எஃகு, இரும்பு, அலுமினியம் போன்றவைகளில் அடைக்கப்பட்ட அனைத்து வகை பால் கேன்களுக்கும் ஒரே மாதிரியான 12% வரி விகிதத்தை கவுன்சில் பரிந்துரைத்தது. இந்த விகிதத்தில் எந்த சர்ச்சையும் ஏற்படாத வகையில் பயன்படுத்தப்படும். அனைத்து அட்டைப்பெட்டிகள்  காகிதம் அல்லது காகிதப் பலகைகளின் மீது 12% ஒரே மாதிரியான ஜிஎஸ்டி விகிதத்தை பரிந்துரைக்கவும் கவுன்சில் பரிந்துரைத்தது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 






இந்திய ரயில்வே வழங்கும் சேவைகள், நடைமேடை டிக்கெட் விற்பனை, ஓய்வு அறைகள், காத்திருப்பு அறைகள், ஆடை அறை சேவைகள் உள்ளிட்ட சேவைகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.


மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கும் ஜி.எஸ்.டி வரி விலக்கு அளிக்கப்படும் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.