வட இந்தியாவில் அமைந்துள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் படையினருக்கும் மத்திய பாதுகாப்பு படையினருக்கும் அடிக்கடி தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அந்த மாநிலத்தின் பிஜாப்பூர் மாவட்டத்தில் டராம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் மத்திய பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் இன்று ஈடுபட்டனர்.




அப்போது, அவர்களுக்கும் மாவோயிஸ்டினருக்கும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. தீவிரமாக நடைபெற்ற இந்த சண்டையில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை சகவீரர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.