உலக காண்டாமிருக தினம் கடந்த 2010 ஆம் ஆண்டும் தென்னாப்பிரிக்காவில் அறிவிக்கப்பட்டது. காண்டாமிருகம் இந்தியாவில் மட்டுமின்றி ஜாவா, சிமத்ரா திவு, ஆப்ரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் வாழ்ந்து வருகிறது. சுமார் 1000 கிலோ கொண்ட காண்டாமிருகம் ஆறடி உயரம் வளரக்கூடியது. சுமார் 40 முதல் 50 ஆண்டுகள் வரை வாழக் கூடிய இந்த காண்டாமிருகங்கள் ஒரே பிரசவத்தில் ஒரு கன்றை மட்டுமே ஈனும்.  நிலத்தில் வாழக்கூடிய  யானைக்கு பிறகு பெரிய உயிரினம் கொண்டது  காண்டாமிருகம் தான். கருப்பு வெள்ளை ஆகிய இடங்களில் இந்த விலங்கு இருக்கும்.


இந்த உயிரினம் தற்போது அதிகமாக அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் காணப்படுகிறது. குறைவாக உத்தரபிரதேச பகுதியிலும் வாழ்ந்து வருகிறது. உலக அளவில் யானையின் தந்து நிகரான விலை காண்டாமிருகத்தின் கொம்பு கிடைப்பதால் அதனை பலரும் வேட்டையாடுகின்றன. இதனால் அவற்றின் இனம் அழியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 


அழிவின் விளிம்பில் இருக்கும் காண்டா மிருகத்தை காப்பாற்றுவதற்காக ஆண்டுதோறும் செப்டம்பர் 22ஆம் தேதி உலக காண்டாமிருக தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு ஆய்வு அறிக்கையின்படி இந்தியாவில் சுமார் 3000 காண்டாமிருகங்கள் வாழ்கின்றனவாம். அதில் 2000க்கும் மேற்பட்டவை அசாம் மாநிலத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 


இந்நிலையில் காண்டா மிருகங்களை மனிதர்களிடமிருந்து காப்பாற்றும் நோக்கத்தில் அசாம் மாநிலத்தில் உலக காண்டாமிருக தினமான இன்று சுமார் 2 ஆயிரத்து 479 காண்டாமிருக கொம்புகளை அம்மாநில முதலமைச்சர் பொதுவெளியில் போட்டு எரித்தார். 






Bokakhat பகுதியில் இருக்கும் கார் ஜிங்கா தேசிய பூங்காவில் இந்த விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அசாம் மாநில முதலமைச்சர் ஹீமாந்தா பிஸ்வா சர்மா இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். 


இதுகுறித்து அசாம் மாநில வனத்துறை வெளியிட்டிருக்கும் குறிப்பில், "அழிந்துவரும் காண்டா மிருகங்களின் நலனுக்காக அசாம் மாநிலத்தில் ஒரு புதுவிதமான விழிப்புணர்வு நடத்தப்பட்டது. காண்டாமிருகத்தின் கொம்புகளில் மருத்துவகுணம் இருப்பதாகவும் அதனால்தான் மக்கள் வேட்டையை ஆடுவதாகவும் தெரிவித்தனர். 


ஆனால் காண்டா மிருகங்களின் கொம்புகளில் எந்த பயனும் இல்லை என்று பலமுறை ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இது தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. அதனால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அசாமில் கருவூலங்களில் சேமித்து வைத்திருந்த சுமார் 2 ஆயிரத்து 479 கொம்புகளை இன்று நாங்கள் பொதுவெளியில் போட்டு எரித்து உள்ளோம். 2,606 கொம்புகள் இருந்த நிலையில் 94 கொம்புகள் கல்விக்காக எடுக்கப்பட்டது மீதமுள்ள 50 கொம்புகள் நீதிமன்ற வழக்குகளுக்காக பாதுகாக்கப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது