Dog Ban In India: நாய் பிரியர்களே தெரிஞ்சிக்கோங்க! இந்த 23 வகை நாய்களை வளர்க்க தடை! மத்திய அரசு அதிரடி..

இந்தியாவில் அதிகரித்து வரும் நாய் கடியால் 23 வகை நாய்கள் வீட்டில் வளர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

 

Continues below advertisement

மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் 23 வகையான நாய்களை வளர்க்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. 

அந்த கடிதத்தில், “வளர்ப்பு நாய்கள் தாக்குதலால் மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் கீழே குறிப்பிட்டுள்ள நாய் இனங்களை வளர்க்க தடை விதிக்க வேண்டும். அதாவது, பிட்புல் டெரியர், டோசா இனு, அமெரிக்கன் ஸ்டாஃபோர்ட்ஷையர் டெரியர், ஃபிலா பிரேசிலிரோ, டோகோ அர்ஜென்டினோ, அமெரிக்கன் புல்டாக், போர்போயல், கங்கல், மத்திய ஆசிய ஷெப்பர்ட் நாய், காகசியன் ஷெப்பர்ட் நாய், தென் ரஷ்ய ஷெப்பர்ட், டோர்ன்ஜாக், டோசாலினாக், அகிடா, மாஸ்டிஃப்ஸ், ராட்வீலர், டெரியர்ஸ், ரோடீசியன் ரிட்ஜ்பேக், ஓநாய் நாய்கள், கனாரியோ, அக்பாஷ் நாய், மாஸ்கோ காவலர் நாய், கேன் கோர்சோ ஆகிய 23 வகை நாய்களை வளர்க்க தடை விதிக்க வேண்டும். மேலும் ஏற்கெனவே வளர்க்கப்படும் நாய்கள் இனப்பெருக்கம் நடைபெறாமல் இருக்க கருத்தடை செய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட நாய் இனங்களை விற்பனை செய்வதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் உரிமம் வழங்க கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட நாய் வகைகள்:

  • பிட்புல் டெரியர்
  •  தோசா இனு
  •  அமெரிக்கன் ஸ்டாஃபோர்ட்ஷையர் டெரியர்
  •  ஃபிலா பிரேசிலிரோ
  •  டோகோ அர்ஜென்டினோ
  •  அமெரிக்கன் புல்டாக்
  •  போஸ்போல்
  •  கங்கல்
  •  மத்திய ஆசிய ஷெப்பர்ட் நாய்
  •  காகசியன் ஷெப்பர்ட் நாய்
  •  தென் ரஷ்ய ஷெப்பர்ட் நாய்
  •  டோர்ன்ஜாக், சர்ப்லானினாக்
  •  ஜப்பானிய தோசா மற்றும் அகிதா
  •  மாஸ்டிஃப்ஸ்
  •  ராட்வெய்லர்
  •  டெரியர்கள்
  •  ரோடீசியன் ரிட்ஜ்பேக்
  •  உல்ஃப் நாய்கள்
  •  கனாரியோ
  •  அக்பாஷ்
  •  மாஸ்கோ காவலர்
  •  கேன் கோர்சோ
  •  பந்தோக் ஆகிய வெளிநாட்டு நாய் இனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Continues below advertisement
Sponsored Links by Taboola