இந்தியாவிற்கு எதிராக அவதூறு பரப்பும் 20 யூட்யூப் சேனல்கள் மற்றும் வெப்சைட்டுகள் முடக்கம்!

எதிர்காலத்திலும், இந்தியாவுக்கு எதிரான சதி, பொய்களைப் பரப்புதல் மற்றும் சமூகத்தை பிளவுபடுத்துதல் போன்ற எந்தவொரு செயலை செய்தாலும் அந்த கணக்குகளையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்

Continues below advertisement

இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் போலிச் செய்திகளைப் பரப்பியதற்காக இரண்டு இணையதளங்கள் மற்றும் 20 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டிற்கு எதிரான "சதித் திட்டம் தீட்டுபவர்களுக்கு" எதிராக அரசாங்கம் தொடர்ந்து செயல்படும் என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் புதன்கிழமை எச்சரித்தார்.

Continues below advertisement

"நான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கருத்து தெரிவித்தேன். உலகெங்கிலும் உள்ள பல பெரிய நாடுகள் இதை அறிந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். யூடியூப் முன் வந்து அவர்களைத் தடுக்க நடவடிக்கை எடுத்தது" என்று தாக்கூர் ஊடகங்களுக்குப் பதிலளித்தார். உளவுத்துறை நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்பில், 20 யூடியூப் சேனல்கள் மற்றும் இரண்டு இணையதளங்களைத் தடைசெய்யுமாறு 2021 டிசம்பரில் I&B அமைச்சகம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின் பேரில்தான் இந்த நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன என்று கூறப்படுகிறது.

மேலும், எதிர்காலத்திலும், இந்தியாவுக்கு எதிரான சதி, பொய்களைப் பரப்புதல் மற்றும் சமூகத்தை பிளவுபடுத்துதல் போன்ற எந்தவொரு செயலை செய்தாலும் அந்த கணக்குகளையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் கூறினார். முன்னதாக, இந்த 20 யூடியூப் சேனல்களும் இணையதளங்களும் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஒருங்கிணைக்கப்பட்ட தவறான தகவல் வலையமைப்பைச் சேர்ந்தவை என்று அமைச்சகம் கூறியது. காஷ்மீர், இந்திய ராணுவம், இந்தியாவில் உள்ள சிறுபான்மை சமூகங்கள், ராம் மந்திர், மறைந்த சி.டி.எஸ் ஜெனரல் பிபின் ராவத் போன்ற தலைப்புகளில் நாட்டின் ஒற்றுமையை பிளவுபடுத்தும் கருத்துகளை பகிர இந்த சேனல்கள் பயன்படுத்தப்படுகின்றன” என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த யூட்யூப் சேனல்களின் பின்னணி குறித்தும் சைபர் செல் ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட 20 யூடியூப் சேனல்களில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் நயா பாகிஸ்தான் குழுமம் (என்பிஜி) நடத்தும் சேனல்களும் அடங்கும். NPG குறைந்தது 3.5 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்ட YouTube சேனல்களின் நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது. அவர்களின் வீடியோக்கள் 550 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளன என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. "என்பிஜியின் சில யூடியூப் சேனல்கள் பாகிஸ்தானிய செய்தி சேனல்களின் தொகுப்பாளர்களால் இயக்கப்படுகின்றன," என்று அந்த அறிக்கை கூறியது. 20 சேனல்களில் இன்டர்நேஷனல் வெப் நியூஸ், கல்சா டிவி, தி பஞ்ச் லைன், 48 நியூஸ், தி நேக்கட் ட்ரூத், நியூஸ் 24, ஃபிக்ஷனால் ஹிஸ்டரி ஃபேக்ட், பஞ்சாப் வைரல், நயா பாகிஸ்தான் குளோபல் மற்றும் கவர் ஸ்டோரி ஆகியவை அடங்கும். சேனல்கள் தவிர, காஷ்மீர் குளோபல் மற்றும் காஷ்மீர் வாட்ச் இணையதளங்களும் முற்றிலுமாக முடக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola