ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கிராம மக்களால் பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது. 


கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மற்றும் குல்காம் பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த காவல் அதிகாரி ரியாஸ் அகமது கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த ஜுனைத் ஷீர்கோஜ்ரி என்ற பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். 


இதேபோல் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு சண்டை நடைபெற்றது. இதில் நடத்தப்பட்ட என்கவுண்டரில் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த ஃபாசில் நசீர் பட் மற்றும் இர்பான் அஹ் மாலிக் இருவரும் கொல்லப்பட்டனர். இவர்களும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் போன்றவற்றை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீநகரின் க்ரீஸ்பால் பால்போரா சங்கம் பகுதியில் நடைபெற்ற என்கவுண்டர் தாக்குதலில் அடில் பர்ரே என்ற பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். இதனால் பொதுமக்களும்,காவல் துறையினரும் சற்று நிம்மதியடைந்தனர். 






இந்நிலையில் காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள துக்சன் கிராமத்தில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த  தாலிப் ஹுசைன் என்ற பயங்கரவாதியும், தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த பைசல் அகமது தர் என்ற பயங்கரவாதியும் அங்குள்ள மக்களால் துரத்தி பிடிக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில் பயங்கரவாதிகளிடமிருந்து இரண்டு ஏகே 47 ரக துப்பாக்கிகள், ஏழு கையெறி குண்டுகள் மற்றும் ஒரு கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாகவும்,  கிராம மக்களின் துணிச்சலுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என காவல்துறை இயக்குநர் தில்பாக் சிங் அறிவித்துள்ளார். துணிச்சலுடன் செயல்பட்ட பொதுமக்களை பலரும் பாராட்டி வருகின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண