உலகம் முழுவதும் வெறும் நகைச்சுவைக்காக கொண்டாடப்படும் ஏப்ரல் முதலாம் நாள் முட்டாள்கள் தினம், கேரளாவில் 17 வயது சிறுவனை பலிவாங்கியுள்ளது. அலப்புழா மாவட்டத்தில் வாடைகை வீட்டில் வசித்து வரும் சித்தார்த் அஜய் ஏப்ரல் தினத்தன்று நண்பர்களை ஏமாற்றும் வகையில் தற்கொலை செய்வது போல் மொபைலில் லைவ் செய்தியிருக்கிறார். ஆனால், எதிர்பாரதாத விதமாக, பெட்ஷீட்டில் அவரின் கழுத்து மாட்டிக் கொண்டது.
எடத்துவா காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்து கூறுகையில், "இரவு உணவு முடித்து விட்டு, தனது அறைக்குச் சென்ற சிறுவன், வெகு நேரமாக வெளியே வரவில்லை. சிறுவனின் தாயார் சந்தேகத்தின் பேரில் அறைக்குள் நுழைந்தபோது, சிறுவன் சீலிங் பேனில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டும் பலனளிக்கவில்லை. அறையில் இருந்த செல்போன் கைப்பற்றியுள்ளோம். அது , லைவ் மோடில் இருந்தது. தற்கொலைக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. ஏப்ரல் தினத்தன்று விளையாட்டாக செய்த செயலாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறது" என்று தெரிவித்தனர்.
அறையில் இருந்த செல்போனை காவல்துறை விசாரனைக்கு கைப்பற்றியுள்ளது. மேற்படி, விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.