வட இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்று குஜராத். பருவகாலம் மாறியதால் நாடு முழுவதும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மழை காரணமாக உடல்நலக்குறைவு, காய்ச்சல் உள்ளிட்டவைகளும் ஏற்படுகிறது.


16 பேர் உயிரிழப்பு:


இந்த சூழலில், குஜராத் மாநிலத்தில் சமீப நாட்களாக வைரஸ் ஒன்று பரவி வருகிறது. அந்த மாநிலத்தில் பலருக்கும் திடீரென வயிற்றுப் போக்கு மற்றும் உடலில் வீக்கங்கள் ஏற்பட்டது. திடீரென பலருக்கும் இதுபோன்று இந்த பாதிப்புகள் ஏற்பட்டதால் அவர்களது ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அப்போது, ஆய்வுக்காக அனுப்பப்பட்டவர்களின் பலரது உடலிலும் சண்டிபுரா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.


குஜராத் மாநிலம் முழுவதும் தற்போது வரை 50 பேருக்கு சண்டிபுரா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குஜராத் முழுவதும் 16 பேர் சண்டிபுரா வைரசால் உயிரிழந்துள்ளனர். இதனால், அந்த மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் உயிருக்கு ஆபத்தான வைரஸ் பரவி வருவதால், அந்த மாநிலத்தில் சுகாதாரத்துறையினர் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகரித்துள்ளனர்.


கண்காணிப்பு தீவிரம்:


அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ருஷிகேஷ் படேல் அதிகாரிகளிடம் நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் குஜராத்தில் சண்டிபுரா வைரஸ் குழந்தைகளிடமும் அதிகரித்து காணப்படுகிறது. அதேசமயம் உடலில் வீக்கங்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கு சண்டிபுரா வைரஸ் மட்டும் காரணமாக இருக்க முடியாது, மூளைகாய்ச்சல் காரணமாகவும் இது ஏற்படலாம் என்றும் சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.


சண்டிபுரா வைரஸ் பாதிப்பு குறித்து அந்த மாநில முதல்வர் பூபேந்திர படேல் தொடர்ந்து கண்காணித்து சண்டிபுரா வருவதாகவும் மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், வைரஸ் பாதிப்பு திடீரென ஏற்பட்டதற்கு என்ன காரணம்? என்று ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள், வெளிமாநிலங்களுக்கு செல்பவர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல, குஜராத் அண்டை மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: Chandipura Virus: குழந்தகளை தாக்கும் சண்டிபுரா வைரஸ் - 16 பேர் உயிரிழப்பு, 50 பேர் பாதிப்பு - குஜராத் அரசு எச்சரிக்கை


மேலும் படிக்க: ராணுவ வீரர்களுக்கு விசிஸ்ட் சேவா பதக்கங்களை வழங்கிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!