நாடு முழுவதுமுள்ள 543 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. முக்கியமாக ஆந்திராவில் சற்றும் எதிர்பார்க்காத வகையில், தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது.
2019 ஆம் ஆண்டு தேர்தலில் 50% மேல் வாக்கு ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கிட்டத்தட்ட 50 சதவீத வாக்குகளுடன் 151 சட்டமன்றம் மற்றும் 23 மக்களவைத் தொகுதிகளை வென்றது. 2024 வெறும் 10 சட்டமன்றம் மற்றும் நான்கு மக்களவைத் தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டி மோசமான தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் பற்றி ஓர் பார்வை:
- செப்டம்பர் 2023- ல் சந்திர பாபு நாயுடு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருடைய கைது நடவடிக்கை மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆந்திராவின் மிகப்பெரிய மற்றும் மூத்த தலைவரின் கைது நடவடிக்கை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இருக்கலாம் என பல்வேறு கருத்துக்கள் வெளியானது.
- ஆந்திராவில் சட்டமன்ற தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல் ஒன்றாக நடைபெற்றது. ஆனால் தேர்தல் பிரச்சாரத்தில் தெலுங்கு தேசம் கட்சி சற்று பின் தங்கி இருந்த நிலையில் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து களம் காணும் என அறிவிப்பை வெளியிட்டது. இது மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
- தெலங்கானா மற்றும் கே.சி.ஆர் பாடங்கள் ஜெகன் மோகன் ரெட்டிக்கு இந்த தேர்தலில் உதவவில்லை. 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பி.எஸ்.ஆர் புதிய வேட்பாளர்களை களம் இறக்காததால் தோல்வியை தழுவியது. ஆனால் ஜெகன் மோகன் ரெட்டி புதிய வேட்பாளர்களை களமிறக்கி இருந்தாலும் அது இந்த தேர்தலில் கைகொடுக்கவில்லை
- தேசிய ஜனநாயக கூட்டணி கருத்துக்கணிப்பின் படி அபார வெற்றி பெற்றது. பவன் கல்யாண் மற்றும் சந்திரபாபு நாயுடு தேர்தல் நெருங்கும் சமயத்தில் அவ்வப்போது பிரச்சாரங்கள் மற்றும் மரியாதை நிமித்தமாக முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் நடத்தியதும் இந்த தேர்தலில் பெரிதும் கைக்கொடுத்துள்ளது.
- ஜெகன் மோகன் ரெட்டி அரசு நலத்திட்டங்களைத் தாண்டி எதிலும் கவனம் செலுத்தவில்லை என்ற கருத்து மக்கள் மத்தியில் மிகவும் ஆழமாக பதிந்து இருந்தது. அதேபோல் இளைஞர்கள் மத்தியில் வேலையின்மை திண்டாட்டமும் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி கவிழ முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
- பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடு மற்றும் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் ஆகிய மூன்று பேரும் தொடர்ச்சியாக ஜெகன் மோகன் ரெட்டி மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். மேலும், ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையான ஷர்மிளா கடப்பா தொகுதியில் போட்டியிட்டாலும் அவர் தோல்வி அடைந்தார். ஆனால் அவரது தேர்தல் பிரச்சாரங்களில் ஜெகன் மோகன் ரெட்டியை விமர்சித்து உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அதேபோல் தெலங்கானாவில் நிலவும் உண்மையான நிலவரம் குறித்த கருத்துக்களை ஜெகன் மோகன் ரெட்டிக்கு சென்றடையாத வகையில் சிலர் செயலபட்டதால், கள நிலவரம் பற்றி அறியாத நிலை இருந்தது முக்கிய காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.