Headlines Today:
தமிழ்நாடு:
- திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் இன்று, காலை பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில், மாலை மகா தீபம் மலையின் மீது ஏற்றப்படவுள்ளது.
- திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்ட லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
- அதிமுக பொதுக்குழு வழக்கின் இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
- மறைந்த இந்திய அரசியல் அமைப்பு சட்ட நிறுவனர் அம்பேத்கர் அவர்களின் 66வது நினைவு நாளை முன்னிட்டு, குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் அவரது சிலை மற்றும் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
- தமிழ்நாடு ஆளுநர் ரவி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.
- புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வரும் 8ஆம் தேதி சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 8,9ல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலார்ட் என அறிவித்து சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
இந்தியா
- குஜராத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கப்போவதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
- குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான 2ம் கட்ட தேர்தலில் 60% வாக்குகள் பதிவானதாக இந்திய வானொலி நிலையம் தகவல்.
- பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தினை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உலகம்
- கொலாம்பியாவில் நிலச்சரிவு ஏற்பட்டு 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
வணிகம்
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 குறைந்து ரூ. 40,080 ஆக விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.5,010 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 43,296 ரூபாயாகவும், ஒரு கிராம் ரூ.5,412 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில் வெள்ளி விலை ரூ.70.80 ஆக விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ ரூ70,800ஆக விற்பனையாகிறது.
விளையாட்டு:
- ஐசிசி டி20 உலகக் கோப்பை மற்றும் தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அண்டர் 19 மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
- உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்றைக்கு போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து அணி மோதிக்கொள்கின்றன.
- மற்றொரு போட்டியில் மொராக்கோ, ஸ்பெயின் மோதவுள்ளன.
- நாளை இந்தியா, வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நடக்கவுள்ளது.