பள்ளிக்கூடம் என்றாலே பசுமையான இடம் தான். ஒரு குழந்தையை கருவாக்கியது பெற்றோர் என்றால் உருவாக்குவது பள்ளிதான். பள்ளியில் தான் சமூகத்துடன் வாழ்தலை குழந்தைகள் பழகிக் கொள்கின்றனர். அப்படி பள்ளிக்கூடத்தில் நடந்த சம்பவம் ஒன்று இணையவாசிகளை நெகிழச் செய்துள்ளது.


ஜம்வால்நிதி என்ற ட்விட்டராட்டி அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று 90 ஆயிரம் பார்வைகளைக் கடந்து 2000 லைக்க்களைக் கடந்து வைரலாகிக் கொண்டிருக்கிறது. அந்தப் பெண் அவரது மகனுக்கு மதிய உணவாக அவருக்கு மிகவும் பிடித்த செஸ்வான் ஃப்ரைட் ரைஸை பேக் செய்து கொடுத்து அனுப்பியுள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த லஞ்ச்பாக்ஸ் கீழே விழுந்து மொத்த உணவும் கொட்டியுள்ளது. உடனே சுற்றியிருந்த குழந்தைகள் எல்லோரும் அவர்களுடைய லஞ்ச் பாக்ஸை கொண்டுவந்த அச்சிறுவனிடம் நீட்டியுள்ளனர். சிலர் தங்களின் ஸ்நாக் கூப்பனைத் தரவும் முன்வந்துள்ளனர். இந்தச் சம்பவத்தை விவரித்துள்ள ஜம்வால் நிதி, குழந்தைகள் இந்த உலகத்தை குணப்படுத்துவார்கள் என்று எழுதியுள்ளார்.


அந்தத் தாயின் பதிவு:






 


ட்விட்டராட்டிகளின் ரியாக்‌ஷன்:






 






 






 


இவ்வாறு இணையவாசிகள் பலரும் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து குழந்தைகளின் உலகைக் கொண்டாடி வருகின்றனர்.