தமிழ்நாடு:



  • பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் பயனாளர்களின் வீடுகளுக்கே சென்று, தமிழகம் முழுவதும் இன்று முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

  • அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகியிடம் 1 லட்சம் கொள்ளை

  • தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு பணி ஒத்திகை நடைபெற்றது.

  • தாம்பரத்தில் நடைபெற்ற இந்திய வரலாற்றுப் பேரவையின் 81ஆவது மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நாட்டை சூழ்ந்துள்ள ஆபத்து வரலாற்று திரிபு தான் எனப் பேசியுள்ளார்.

  • அதிமுகவின் இடைக்காலச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நிறைவு பெற்றது.

  • அதிமுகவின் பெயரையும் கொடியையும் தொடர்ந்து பயன்படுத்துவோம் என் ஈபிஎஸ் தரப்பினருக்கு ஓ. பன்னீர்செல்வம் பதில் நோட்டீஸ்.

  • ஈரோடு, பெருந்துறை நான்குரோட்டில் சுவற்றில் துளையிட்டு கொள்ளை முயற்சி.

  • குமரிக்கடல் நோக்க் நகர்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி. கடலூர், தூத்துக்குடி மீனவர்கள் மீண்டும் வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கத் திரும்பினர்.

  • தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 29 ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

  • சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று அதிகாலை 4 மணியளவில் மண்டல பூஜை தொடங்கியது. மண்டல பூஜையை முன்னிட்டு இன்று 40 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  • ஆயுர்வேதா, யுனானி, சித்தா, ஓமியோபதி ஆகிய ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று தொடங்கி உள்ளது.


இந்தியா:



  • புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி நாளை முழு கடையடைப்பு போராட்டத்துக்கு அம்மாநில அதிமுகவினர் அழைப்பு.

  • மேகாலயா மாநிலம், உம்ரோவில் இந்தியா - கஜகஸ்தான் ராணுவ வீரர்கள் கூட்டு ராணுவப் பயிற்சி.

  • குஜராத் அருகே 300 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள்களுடன் பாகிஸ்தான் படகு சிக்கியது.

  • வங்கி ‘லாக்கரை’ புதுப்பிக்க ஜனவரி 1ம் தேதி வரை கெடு: புதிய விதிகளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி 

  • வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் அட்மிட் 


உலகம்:



  • சீனாவில் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை இல்லை - சீனா அதிரடி அறிவிப்பு.

  • உக்ரைனின் பாதுகாப்பு படையின் வலிமையை மேம்படுத்துவதற்காக ரூ.1.8 பில்லியன் டாலர் ஆயுத உதவிகளை அமெரிக்கா அறிவித்தது. 

  • ரஷ்யாவின் முக்கியத்துவம் வாய்ந்த எங்கல்ஸ் விமான தளத்தில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலால் மூவர் பலி

  • அமெரிக்காவை நிலைகுலையச் செய்த பனிப்புயலால் 32 பேர் உயிரிழப்பு.


விளையாட்டு:



  • தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் இரட்டை சதமடித்து அசத்தியுள்ளார். 

  • 2023ல் இந்தியாவில் நடக்கவுள்ள இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ரோகித் ஷர்மா மற்றும் கே. எல். ராகுலுக்கு இந்திய அணியில் இடம் இல்லை என தகவல் 

  • பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் பீலேவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

  • ஐந்து பேர் கொண்ட இந்திய அணி தேர்வுக் குழுவிற்கு MS தோனி, வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர் மற்றும் பாகிஸ்தானின் இன்சமாம் உல் ஹக் ஆகியோரின் பெயர்களில் போலியாக விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.