Ayodhya Temple: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக, உலக புகழ்பெற்ற திருப்பதி லட்டுகள் பரிசாக அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அயோத்தி ராமர் கோயில்:


பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.


கும்பாபிஷேக விழாவில் 25,000 துறவிகளை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், இந்து மத தலைவர்களை தவிர, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களுக்கும் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


மாதுரி தீட்சித், அனுபம் கெர், அக்‌ஷய் குமார் மற்றும் பிரபல இயக்குனர்கள் ராஜ்குமார் ஹிரானி, சஞ்சய் லீலா பன்சாலி, ரோஹித் ஷெட்டி, தயாரிப்பாளர் மகாவீர் ஜெயின் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையில், மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் நோக்கில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு வர வேண்டாம் என பொது மக்களை பிரதமர் மோடி சமீபத்தில் கேட்டு கொண்டார். 


ராமர் கோயிலுக்கு திருப்பதி தேவஸ்தானம் பரிசு:


அயோத்தி ராமர் கோயிலுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில்  பரிசு அனுப்பப்படுகிறது. அதாவது, அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக, உலக புகழ்பெற்ற திருப்பதி லட்டுகள் பரிசாக அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையில் லட்டுகள், ராமர் கோயிலுக்கு அனுப்பப்படுகிறது.


 இதுகுறித்து பேசிய திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஏவி தர்மா ரெட்டி, ”பகவான் வெங்கடடேஸ்வரா மற்றும் ஸ்ரீமகா விஷ்ணுவின் அவதாரங்கள் என்றும், நல்லெண்ணச் செயலாக, அயோத்தி ராமர்  கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றும் பக்தர்கள் மற்றும் விஐபிக்களுக்கு ஒரு லட்சம் லட்டுகளை விநியோகிக்கப்படும். ஒவ்வொரு  லட்டும் தலா  25 கிராம் இருக்கும். இந்த லட்டுகள் ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும்" என்றார். 


பொதுவாக ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. கூடுதலாகவும் பணம் செலுத்தி பக்தர்கள் லட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இப்படியான லட்டுகளை அயோத்தி ராமர் கோயிலுக்கு திருப்பதி தேவஸ்தானம் வழங்குகிறது. 




மேலும் படிக்க


TN Rain Alert: தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.. நாளை ஆரஞ்சு அலர்ட் எத்தனை மாவட்டங்களுக்கு?


Pongal Parisu Thogai 2024: நாளை முதல் டோக்கன்.. 10-ஆம் முதல் தொடங்கும், பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்.. முழு ரிப்போர்ட்