அன்பான வாசகர்களே இன்றைக்கு எதைத் தொட்டாலும் ஆன்லைன் தானே amazon, flipkart போன்ற பெரு நிறுவனங்கள் இணைய வர்த்தகத்தை நம்பியே செயல்படுகின்றன... அதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் வருவாயும் கிடைக்கிறது நீங்களும் பொருட்களை வாங்கி மகிழ்கிறீர்கள் அவர்களும் உங்களுக்கு பொருட்களை விற்பனை செய்து மகிழ்கிறார்கள் இருக்கட்டும் நீங்கள் ஒரு ஆன்லைன் பிசினஸ் ஆரம்பிக்கிறீர்கள் அது வெற்றி அடைய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் இதற்கான தெய்வம் யார் எப்படி பிடிப்பது என்பதை பற்றி பார்ப்போமா…

Continues below advertisement

முதலில் ஆன்லைன் பிசினஸுக்கு அதிபதி ராகு… உலகத்தின் எந்த மூலைக்கும் யாரையும் எப்படியும் கொண்டு போகக்கூடிய சக்தி நவீன தொழில்நுட்பத்தின் அதிபதியான ராகுவிடம் இருக்கிறது தொழிலாக செய்ய வேண்டும் என்றால் சனியின் அம்சமோ சனியின் உதவியோ நிச்சயமாக உங்களுக்கு தேவை அப்படியானால் சனி மற்றும் ராகு இருவரின் உதவியை தன்னகத்தே வைத்திருப்பவர் தான் நம் கால பைரவர் கால பைரவருக்கு ஒரு சிறப்பு அம்சம் உண்டு அவர் முக்காலத்தையும் அறிந்தவர் எல்லா காலங்களிலும் பயணிக்க கூடியவர் எல்லா இடத்திலும் இருக்கக்கூடியவர் ஒருவேளை எதிர்காலம் நிகழ்காலம் இறந்த காலம் என்று அனைத்து காலங்களிலும் காலபைரவரின் அம்சம் கொண்ட ஆன்லைன் வர்த்தகத்திற்கு அதிபதியான ராகுவுடன் இணையும் சமயத்தில் உங்களுடைய பொருட்கள் இமீடியட்டா வியாபாரம் ஆகும் குறிப்பாக நீங்கள் ஒரு சோப்பு பிசினஸ் செய்கிறீர்கள் என்றால் அதை ஆன்லைனில் வியாபாரப்படுத்துகிறீர்கள் காலபைரவரின் புகைப்படத்தை வைத்தோம் அல்லது அவரை ஜெபித்து விட்டோம் நீங்கள் இந்த வியாபாரத்தில் இறங்கும் பொழுது அது மிக வேகமாக உலகம் முழுவதும் பரவிச்சென்று உங்களுக்கான வாடிக்கையாளர்களை கொண்டு வந்து உங்களுடைய வங்கி கணக்கு பொருளாதாரத்தை உயர்த்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை....

 

Continues below advertisement

சனிக்கிழமை தோறும் காலபைரவரை வணங்கி வந்தால் தொழில் மேம்படும்.... திங்கட்கிழமை தோறும் காலபைரவரை வணங்கி வந்தால் சீரான வியாபாரம் நடக்கும்... செவ்வாய்க்கிழமைகளில் காலபைரவரை வணங்கி வந்தால் எதிரிகள் தொல்லை ஒழியும்... புதன்கிழமை கால பைரவரை வணங்கி வந்தால் உங்களுடைய வியாபாரம் காப்பாற்றப்படும்... வியாழக்கிழமைகளில் கால பைரவரை வணங்கி வந்தால் கோடிகளில் சம்பாத்தியம்...  வெள்ளிக்கிழமையில் கால பைரவரை வணங்கி வந்தால் அந்த மகாலட்சுமியே உங்களுக்கு உதவி செய்வார்.... 

 காலபைரவரை பொறுத்தவரை நாயின் வாகனமாகக் கொண்டவர்... நாய்களுக்கு ஒரு அதிக சக்தி உண்டு. தன்னுடைய எஜமான்களோ அல்லது யாரோ எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் கூட இங்கிருந்தே உணரக்கூடிய சக்தி உள்ளவர்கள். அப்படித்தான் காலபைரவர் அம்சமும் கூட... எதிர்காலத்தில் நடக்கக்கூடிய மிக பிரம்மாண்டமான விஷயங்களை உணர்ந்து... உங்களுக்கான வழிகளை இப்பொழுது ஏற்படுத்திக் கொடுப்பார்... பைரவரை எப்படி வழிபட வேண்டும்...கிழக்கு முகமாக ஐந்து தீபங்களை ஏற்றி அவரை ஒன்பது முறை சுற்றி வந்து... உங்கள் வியாபாரம் பெருக சாஷ்டாங்கமாக கொடிமரத்து பக்கத்தில் விழுந்து வணங்கி... ஆசிர்வாதத்தை வாங்கிக் கொண்டு கோவிலில் கொடுக்கக்கூடிய எலுமிச்சம் பழத்தை உங்களுடைய வீட்டின் பூஜையறையில் வைத்து வழிபடுங்கள்... இப்படியாக செய்வதன் மூலம் உங்களுடைய ஆன்லைன் வியாபாரம் கொடி கட்டி பறந்து நீங்கள் கோடீஸ்வரராக மாறுவீர்கள்…