டிஜிட்டல் இந்தியா, அதாவது அச்சடிக்கப்பட்ட காகித பணம் இல்லாமல்,வியாபார பரிவர்த்தனைகளை செய்ய வேண்டும் என்று, அரசு, மக்களை கேட்டுக் கொண்டிருந்தது. அதிலும் பண மதிப்பிழப்பு காலகட்டத்திற்குப் பிறகு இந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகப்படுத்துமாறு  அரசு, மக்களிடம் வேண்டுகோள் வைத்திருந்தது.  அரசின் இந்த வேண்டுகோளுக்கு இணங்க,மக்கள் மாறிக் கொண்டிருந்த நேரத்தில் தான், கொரோனா பெருந்தொற்று,  உலகம் முழுவதும், ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த நேரத்தில்,மக்கள் அனைவரும்   தங்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது .


அந்த காலகட்டத்தில்  மெதுவாக சூடு பிடிக்க ஆரம்பித்த இந்த டிஜிட்டல் பரிவர்த்தனையானது, இன்று சிறிய பெட்டி கடைகள் முதல்  தள்ளுவண்டிகளில்  வியாபாரம் செய்யும்  பழம் பூ மற்றும் காய்கறி கடைகள் வரையிலும் பயன்பாட்டில் உள்ளது. இப்படியான  டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு  பீம் ஆப், போன் பே, பேடிஎம், ஏர்டெல் மற்றும் கூகுள் பே என நிறைய வாலட் அப்ளிகேஷன்கள் புழக்கத்தில் உள்ளன.


இதில் ஆன்லைனில்,பணம் அனுப்புவதற்கும் அல்லது பணத்தை பெறுவதற்கும் Google pay  என்ற வாலட் ஆப் ஆனது பாதுகாப்பான மற்றும் நம்பகத்தன்மை நிறைந்ததாக  மக்களால்  கருதப்படுகிறது. செப்டம்பர் 2017 இல் இருந்து சேவையில் கிடைக்கப்பெறும் Google Pay ஆப் ஆனது எல்லாருடைய ஸ்மார்ட் ஃபோன்களிலும் தனக்கென  ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது.


பிற டிஜிட்டல் கட்டண ஆப்புகளை போலன்றி, Google Pay க்கு KYC அல்லது கூடுதல் நிதியை,வாலட்டில் டெபாசிட் செய்யத் தேவையில்லை. உடனடியாக பணத்தை அனுப்ப அல்லது பெற, உங்கள் வங்கிக் கணக்கை மட்டும் சேர்த்தால் போதும். தனிப்பட்ட பண பரிவர்த்தனை மற்றும் வீட்டுச் செலவினங்களுக்கான பணப் பரிவர்த்தனை என  இரண்டு வித வங்கி கணக்குகளை  பயன்படுத்துபவர்கள்,இரண்டு வித வங்கி கணக்குகளை  Google Pay ஆப்பில் சேர்த்து தனித்தனியாக கணக்குகளை பராமரிக்க முடியும்.


பேங்க் அக்கவுண்ட்டுகளை Google Pay உடன் இணைக்கும் முன், BHIM UPIஐ ஏற்கும் வங்கியிடமிருந்து முதலில் டெபிட் அல்லது கிரெடிட் கார்டை வைத்திருக்க வேண்டும். 


Google Payயில் பல வங்கிக் கணக்குகளைச் சேர்ப்பது எப்படி


  1: Google Payயைத் திறப்பதற்கு முன், உங்கள் வங்கியை UPI ஐ ஆதரிக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில், Google Pay -ல் உங்கள் வங்கிக் கணக்கைப் பயன்படுத்த முடியாது. 


  2: பேங்க் அக்கவுண்ட் பட்டனைத் தட்டி, திரையின் மேல் வலது மூலையில் உள்ள ஹாம்பர்கர் மெனுவைத் தட்டவும். 


  3: "வங்கி கணக்கைச் சேர்" என்பதைத் தேர்வுசெய்து, அமைப்புகளைத் தேர்ந்தெடுத்த பிறகு, வங்கிக் கணக்கைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.


ஒரு வங்கியைத் தேர்ந்தெடு என்பதின்,வங்கிகளின் பட்டியலிலிருந்து,உங்கள் வங்கியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.இதனால் Google Pay உங்கள் வங்கிக்கு சரிபார்ப்பு SMS அனுப்பும். 


  5: UPI பின்னை உள்ளிடவும். உங்கள் UPI பின்னை நினைவில் கொள்ள முடியாவிட்டால், படிகளின் பட்டியலைப் பெற, பின்னை மறந்துவிடு என்பதைத் தட்டவும். அவ்வாறு செய்த பிறகு உங்கள் வங்கியிலிருந்து நீங்கள் பெற்ற OTP ஐ உள்ளிடவும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுடைய மற்றும் ஒரு வங்கிக் கணக்கு வெற்றிகரமாக Google Pay ஆப்பில் சேர்க்கப்பட்டிருக்கும்.