நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்றதை அடுத்து முதல்வராக விஜய் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு விழாவில் பேசுகையில் "நம்ம ஜெயிச்சிட்டோம், ஒரு ஆட்டம் ஆடிப்பார்க்கலாம் என யாராவது நினைத்தால்... இப்போது இந்த நிமிஷமே அதை erase பண்ணிடுங்க" என்று எச்சரித்திருந்தார். இந்நிலையில் தவெக நிர்வாகிகள் அவ்வப்போது குற்ற வழக்குகளில் கைதாகி வருகின்றனர். இந்நிலையில் 70 வயது மூதாட்டியிடம் செய்யக்கூடாததை செய்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி இசக்கிராஜா கைது செய்யப்பட்டுள்ளார்
70 வயது மூதாட்டி
நெல்லை பாளையங்கோட்டை புதுப்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் சண்முகவள்ளி (70). இவரது கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், பிள்ளைகளுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டு வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், வீட்டில் இருந்த 13 சவரன் கொள்ளையடிக்கப்பட்டதாக பாளையங்கோட்டை மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
13 சவரன் கொள்ளை
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை மறைத்துவிட்டு மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது புதுப்பேட்டை தெருவைச் சேர்ந்த இசக்கிராஜா என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: சென்னை இளைஞர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்... போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!
தவெக நிர்வாகி
இவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே ஜூஸ் கடை நடத்தி வருவதுடன், தமிழக வெற்றிக் கழகத்தின் நெல்லை வடக்கு மாவட்ட தொண்டரணி இணை அமைப்பாளராகவும் பொறுப்பு வகித்து வந்துள்ளார். இதையடுத்து இசக்கிராஜாவை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் வடக்கு மாவட்ட செயலாளர் மரிய ஜான் உத்தரவின்பேரில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இசக்கிராஜா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
