சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 62-வது பிளாக் பகுதியைச் சேர்ந்த தனுஷ் (19). ஆட்டோ ஓட்டுநர். இவர் மீது ஏற்கனவே மூன்று குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு தனுஷின் அண்ணன் சிலம்பரசன், சத்தியமூர்த்தி நகர் 58-வது பிளாக் வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அப்புகுட்டி என்பவர் குடிபோதையில் சிலம்பரசனை வழிமறித்து வாக்குவாதம் செய்தது மட்டுமல்லாமல் அவரை தாக்கியுள்ளார்.

Continues below advertisement

ஓட ஓட வெட்டி படுகொலை

இதனையடுத்து வீட்டிற்கு சென்ற சிலம்பரசன், நடந்த சம்பவம் தொடர்பாக தனது தம்பி தனுஷிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தனுஷ், சம்பவ இடத்திற்கு சென்று அப்புகுட்டியிடம் கேட்டுள்ளார். அப்போது அங்கு இருந்த அப்புகுட்டி, அவரது தந்தை பொய்யாது மற்றும் மேலும் நான்கு பேர் என மொத்தம் பேர் சேர்ந்து தனுஷை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த தனுஷை மீட்டு ஆட்டோவில்  சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக தனுஷ்  உயிரிழந்தார். 

இதையும் படிங்க: 7 வயது சிறுமி ஹேமலதா அதிர்ச்சி அடங்குவதற்குள் செஞ்சியில் அடுத்த கொடூரம்! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்!

Continues below advertisement

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் கொலை?

இந்த கொலை சம்பவம் தொடர்பாக எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது உயிரிழந்த தனுஷின் சித்திக்கும் பொய்யாது என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தனுஷுக்கும் பொய்யாது குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன்  காரணமாக இந்த கொலை சம்பவம் நடைபெற்றதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

6 பேரும் தலைமறைவு

இதற்கிடையே, கொலைச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் பொய்யாது, அவரது மகன் அப்புகுட்டி உள்ளிட்ட 6 பேரும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களைப் பிடிக்க எம்.கே.பி. நகர் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். வியாசர்பாடியில் முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.