தமிழகத்தில் வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மட்டும் இன்றி உள் மாவட்டங்களிலும் கனமழை பெழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் வேலூர், ராணிப்பேட்டை, மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் பரவலாக லேசான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மூன்று மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில் மலையினால் பல பகுதிகளில் பாதிப்பும், வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

 





அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று வரை சுமார் 21.35 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக வாலாஜாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பள்ளிகளுக்கு இம்மாவட்டத்தில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மொத்தம் 369 ஏரிகளில் 168 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மீதம் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் ராணிப்பேட்டை வழியாக பாயும் பாலாற்றில் மதியம் 2.00 மணி நிலவரப்படி 7122 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளதால் வாலாஜா வட்டம் திருமணச்சேரி இராமம் பாலாற்றின் குறுக்கே உள்ள அணைகட்டை மக்கள் யாரும் கடக்க வேண்டாம் என தண்டோரா மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 



 

மேலும் தொடர் மழை காரணமாக காவேரிபாக்கத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையின் குறுக்கே புளியமரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதனை அப்புரப்படுத்தும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் பொன்னை ஆற்றிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பொன்னை ஆற்றின் கரையோர மக்கள் பிதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளத. மேலும் மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வருவதில் பொது மக்கள் யாரும் வேடிக்கை பார்க்கவோ, நீர் நிலைகளில் இறங்கவோ கூடாது என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 



 

வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 24-மணி நேரத்தில் 24 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மேல்ஆழத்தூரில் 36 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கடந்த ஒரு வாரமாக வேலூர் மாவட்டத்தில் மொத்தம் கூரைவீடுகள், ஓட்டு வீடுகள் என மொத்தம் 66 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. 3 பசுமாடுகள் உயிரிழந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் அரசு சார்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 27 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மொத்தம் உள்ள 230 ஏரிகளில் 96 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. வேலூர் வழியே பாயும் பாலாற்றின் முக்கிய கிளை ஆறுகளான பொன்னை மற்றும் கவுண்டன்ய ஆறுகளில் வெள்ளம் ஏற்மட்டுள்ளது. இதன் காரணமாக காட்பாடி வழியே பாயும் பொன்னை ஆற்றில் மதியம் 1.00 மணி நிலவரப்படி 5317 கன அடி நீர் வருவதால் பொன்னை ஆற்றை ஒட்டிய கரையோர மக்களுக்கு வெள்ள ஆபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 



 

குடியாத்தம் வழியே பாயும் கவுண்டன்யா ஆற்றிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அதன் கரையோர மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் வேலூர் அடுத்துள்ள சதுப்பேரி நிரம்பி வெள்ள நீர் கொணவட்டம், இந்திராநகர், கோரிமேடு ஆகிய பகுதி குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அதனை அப்புரப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது இதனை வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்து வருகிறார். அணைகட்டு அடுத்த பள்ளிகொண்டா அருகே முக்கோட்டி பகுதியில் நீர்வரத்து கால்வாயில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சாலை பாதிக்கப்பட்டுள்ளதால் மாற்று சாலை ஏற்படுத்தப்பட்டுள்ளது இதனை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்து வருகிறார்.  திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 43.57 மீ.மீ அளவுக்கு பதிவாகியுள்ளது.