ஒடிசாவில் 70 வயது பெண்ணை யானை ஒன்று மிதித்து கொன்றது மட்டுமில்லாமல் அவரின் உடலை மோசமாக சிதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை காவல்துறையினர் சனிக்கிழமை உறுதி செய்தனர்.






இதையும் படிக்க: நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய பிரதிநிதிகள் இல்லாத ஆளுங்கட்சியாக மாறும் பாஜக: ரிப்போர்ட் சொல்வது என்ன?


வியாழக்கிழமை காலை, ராய்பால் கிராமத்தில் உள்ள குழாய் கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக மாயா முர்மு என்ற பெண் சென்றுள்ளார்.


அப்போது, தால்மா வனவிலங்கு சரணாலயத்திலிருந்து சென்ற காட்டு யானை அவரை கொடூரமாக தாக்கியது. யானை மிதித்ததை அடுத்து, மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக ராஸ்கோவிந்த்பூர் காவல் நிலைய ஆய்வாளர் லோபாமுத்ரா கதாநாயகி தெரிவித்துள்ளார்.


இதையடுத்து, மாயா முர்முவின் இறுதி சடங்கினை அவரது குடும்ப உறுப்பினர்கள் அன்று மாலையே நடத்தியுள்ளனர். அப்போது, திடீரென அங்கு வந்த அந்த யானை அவரின் உடலையும் எடுத்து சென்றது. 


பின்னர், அந்த உடலை மீண்டும் மிதித்து தூக்கி வீசிவிட்டு தப்பித்து ஓடியது.  பின்னர், மீண்டும் இறுதி சடங்கு நடைபெற்றதாக சம்பவ இடத்தில் இருந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.


இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ்மதுரை : கீழடி அருங்காட்சியக பணிகள் மே 31-க்குள் நிறைவுபெறும் - அமைச்சர் எ.வ வேலு


மதித்து கொன்றுவிட்டு, உடலை தேடி வந்ததன் காரணம் என்ன, அந்த யானைக்கும் முர்முவுக்கும் என்ன தொடர்பு என பல கேள்விகள் எழுந்துள்ளன. பெண் ஒருவரை மிதித்து கொன்றுவிட்டு இறுதி சடங்கின்போது அவரின் உடலை தேடி வந்து சிதைத்த சம்பவம் ஒடிசா மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண