விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டு 1323 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டனர்.
நேற்று மாலை வரை சுமார் 1200 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 10 அடிக்கு மேல் சிலைகள் வைக்க கூடாது என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் கூறியதாவது
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 1323 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. நடப்பாண்டு 1200 இடங்களுக்கு மேலாக விநாயகர் சிலைகள் வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிலைகள் வைத்து மூன்று நாட்களில் நீர் நிலைகளில் கரைக்கப்படுகிறது. நடப்பாண்டு விநாயகர் சிலைகள் வைக்கவும் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கவும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சிலை வைப்பதற்கான விதிமுறைகள்
நிறுவப்படும் சிலைகள் 10 அடிக்கு மேல் உயரம் கொண்டதாக இருக்கக் கூடாது. அதற்கு மேல் உள்ள சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும். சிலை அமைக்கும் இடம் தனியார் உடைய இடமாக இருப்பின் சம்பந்தப்பட்டவரிடம் தலையின்மை சான்றும், பொது அல்லது வேறு துறை சார்ந்த இடத்தில் வைப்பதாக இருப்பின் சம்பந்தப்பட்ட துறையின் ஒப்புதல் பெற்று அதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும்.
தீயணைப்பு தடுப்பு முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினரால் தகுந்த தீ தடுப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதற்கான சான்றும் பெற்றிருக்க வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினரால் தகுந்த தீ தடுப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதற்கான சான்றும் பெற்றிருக்க வேண்டும். மேலும் மின்சார வாரியத்தில் மின் இணைப்பு எங்கே இருந்து பெறப்படுகிறது என்பதற்கான சான்றும் இணைக்கப்பட வேண்டும்.
சுத்தமான களிமண்ணால் சிலைகள் செய்திருக்க வேண்டும்
விநாயகர் சிலை சுத்தமான களிமண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும். பிளாஸ்டிக் பாரிஸ் போன்ற பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட பூச்சிகளைக் கொண்டு வண்ணம் தீட்டப்பட்ட சிலைகளையோ அல்லது தீங்கு விளைவிக்க கூடிய பூச்சிகள் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் பட்டியலிடப்பட்ட வண்ண பூச்சிகளால் அலங்கரிக்கப்பட்ட சிலைகளை பயன்படுத்தக் கூடாது
சிலைகள் அமைக்க கொட்டகைகள் எளிதில் தீ பிடிக்காத வண்ணம் இருக்க வேண்டும்
சிலைகள் நிறுவ அமைக்கப்படும் கொட்டகை எளிதில் தீப்பிடித்ததாக பொருட்களை கொண்டும் நுழைவிடம் மற்றும் வெளியேறும் இடம் ஆகிய ஆகியவை தனித்தனியாக வைத்து போதுமான இடவசதியுடன் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் முதலுதவி மற்றும் தீ தடுப்பு உபகரணங்கள் தயாராக வைத்திருக்க வேண்டும்
பள்ளிக்கூடங்கள் மருத்துவமனைகள் அருகில் சிலைகள் வைக்கக்கூடாது
வழிபாட்டுத்தலங்கள் மருத்துவமனைகள் மற்றும் கல்விக்கூடங்களுக்குள் அழுகாமையில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தக் கூடாது கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது பெட்டி வடிவ ஒலிபெருக்கிகளை மட்டுமே குறைந்த ஒளியுடன் வைத்துக் கொள்ள வேண்டும் மேலும் உரிமம் பெற்று காலை இரண்டு மணி நேரமும் மாலை 2 மணி நேரமும் மட்டுமே ஒலிபெருக்கியை பயன்படுத்த வேண்டும் சிலை நிறுவம் குழுவில் உள்ள ஏற்பாட்டாளர் மின்சாரத்தை சட்டவிரோதமாக உபயோகிக்க கூடாது நிறுவப்படும் சிலைகளை ஐந்து நாட்களுக்குள் நீர் நிலைகளில் கரைத்து விட வேண்டும்
சிலையை கரைக்கும் விதிமுறைகள்
நண்பகலில் 12 மணிக்குள் எடுத்துச் சென்று அனுமதிக்கப்பட்ட பாதையில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மற்றும் கரைக்க வேண்டும். சிலைகளை எடுத்துச் செல்ல மாட்டு வண்டி, மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் மீன் வண்டிகள் எதையும் பயன்படுத்தக் கூடாது.
வாகனத்தில் நான்கு நபர்களை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் சிலைகளை கரைக்க முன்பு எளிதில் கரையாத மற்றும் தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்களை நீக்கிய பின்பே கரைக்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி மாவட்ட எஸ்.பி மகேஸ்வரன் தலைமையில் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்