கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மயிலாடும்பாறை பகுதியில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஊத்தங்கரை தாலுகா குன்னத்தூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட சென்னானூரில் மலை அடிவாரம் அருகே 20 ஏக்கர் பரப்பளவில் பழங்கால பானையோடுகள் அதிகம் கிடைத்துள்ளது.


இதனால் இந்த பகுதியிலும் தமிழ்நாடு அரசு அகழாய்வு பணிகளை தொடங்க வேண்டும். இங்கே முன்னோர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைப்பதாக பொது மக்களும் வரலாற்று ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர். இந்த பகுதியில் அண்மையில் தமிழக அரசு அகழாய்வு மேற்கொண்டுள்ளது. இந்த பகுதி மயிலோடும் பாறையை போன்றது. இதனை தொடர்ந்து கடந்த 6 நாட்களுக்கு முன் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டது.


இங்கு ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நுண் கற்கருவிகள் தொடங்கி, உடைந்த புதிய கற்கால கை கோடாரிகள், இரும்பு காலத்தை சேர்ந்த கருப்பு, சிவப்பு, பானையோடுகள், இரும்பு கழிவுகள், பாறை ஓவியங்கள் என வரலாற்றுக்கு முற்பட்ட கால எச்சங்களோடு, வரலாற்று காலத்தின் தொடக்கமான சங்க காலத்தை சேர்ந்து செங்கற்கள் கிடைத்துள்ளன. 


இந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் பக்கம் முழுவதும் 100 பழங்கால செங்கற்களை கொண்டு சமீபத்தில் சுவர் எழுப்பி உள்ளனர். இந்த நிலத்தின் அடியில் இந்த செங்கற்கள் வரிசையாக இருப்பதாக ஊர் மக்கள் தெரிவித்தனர். 


இந்த செங்கற்கள் 2000 ஆண்டுகள் பழமையானது. இதன் மூலம் இந்த இடம் சங்க கால மக்களின் வாழ்விடமாக இருக்கக்கூடும் என்பதால், தற்போது அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பணியின் போது,  53cm ஆழ அகழாய்வு குழுவில் உடைந்த புதிய கற்கால கருவி ஒன்று கிடைத்துள்ளது.  


இந்த கருவியின் நீளம் 6 சென்டி மீட்டர், அகலம் 4 சென்டி மீட்டர் ஆக உள்ளது. இந்த கருவி சுமார் 4000 ஆண்டுகள் பழமையானது. புதிய கற்காலத்தில் தான் முதன் முதலில் விவசாயம் செய்ய துவங்கினர். அப்போது விவசாயத்திற்கு 30 முதல் 25 சென்டி மீட்டர் நீளமுள்ள கற்கருவியைத் தான் பயன்படுத்தினர்.


பி கருவி சிறியது என்பதால், மரங்கள் மற்றும் இறைச்சியை வெட்டவும், வேட்டையாடவும் கோடாரியை போன்று இதை அப்போது மனிதன் பயன்படுத்தியுள்ளான் என்பது தெரிய வந்துள்ளதாக சென்னானூர் அகழாய்வு இயக்குனர் பரந்தாமன் தெரிவித்துள்ளார்.


மேலும் இந்த பகுதியில் தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னானூர் பகுதியில் இன்னும் பல வரலாற்றுச் சுவடுகள் கிடைக்க வாய்ப்புள்ளாதாக தெரிவித்துள்ளார்.