சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததன் எதிரொலியால், காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் சரிந்து வினாடிக்கு 28,000 கன அடியிலிருந்து 17,000 கன அடியாக சரிந்தது-ஒகேனக்கல்லில் 35-வது நாளாக தொடரும் தடையால் சுற்றலா பயணிகள் ஏமாற்றம்.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வந்ததால், கர்நாடகா அணைகள் முழுவதும் நிரம்பியது. இதனால் உன் காவிரி ஆற்றில் அதிகபட்சமாக புரண்டு புள்ளி 50 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இதனை தொடர்ந்து காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மலை அதிகரிப்பதும் குறைவதும் என மாறி மாறி இருந்து வருகிறது.
இந்த நிலையில் மழை அதிகரிக்கின்ற பொழுது தமிழகத்திற்கு திறக்கப்படும் உபரி நீர் அளவு அதிகரிக்கப்படுவதும் குறைந்தால் நீர் திறப்பு கொடுப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததாலும், கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 20,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
காவேரி ஆற்றில் குறைந்த நீர்வரத்து
இந்த நிலையில் மூன்று நாட்களாக தண்ணீர் வரத்து குறைந்து வந்த நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, நேற்று காலை வினாடிக்கு 28,000 கன அடியாக உயர்ந்தது.
இதனால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்த நிலையில் தற்போது மழை குறைந்ததாலும், கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று காலை நிலவரப்படி தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 28,000 கன அடியாக இருந்த நீர்வரத்து மீண்டும் குறைந்து வினாடிக்கு 17,000 கன அடியாக சரிந்துள்ளது. கடந்த பத்து நாட்களுக்கு மேலாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதும் என மாறி மாறி இருந்து வருகிறது.
முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை
ஆனால் நீர்வரத்து குறைந்தாலும், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், தண்ணீர் ஒகேனக்கல்லில் தேங்கி நின்று, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது.
தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று 35-வது நாளாக ஒகேனக்கலில் குளிக்க கடை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று நீர்வரத்து அதிகரிப்பால், பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று பரிசல் இயக்க 2-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததாலும், கர்நாடக அணைகளில் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால், இந்த நீர்வரத்து படிப்படியாக குறையும் என மத்திய நீர் வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இன்று ஞாயிறு விடுமுறையை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வர வாய்ப்புள்ளது. மேலும் நீர்வரத்து குறைந்து வருவதால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வாய்ப்புள்ளது.