தமிழகத்தில் நுளம்பர் காலத்தில் சேர்ந்த கட்டிடக்கலைக்கு சான்றாக தர்மபுரி கோட்டை வளாகத்திற்குள் அமைந்திருக்கும் மல்லிகார்ஜுனேஸ்வரர் எனப்படும் ஈஸ்வரன் கோவில் மற்றும் காமாட்சி அம்மன் கோவில் விளங்குகிறது.
கோட்டைக்குள் அமைந்த கோயில்
இக்கோயில் கோட்டைக்குள் அமைந்துள்ளதால் கோட்டை கோயில் என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகிறது. தர்மபுரி நகரத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இக்கோயிலில் காணப்படும் தொங்கும் தூண் ஒரு பொறியியல் அதிசயம் என்றே குறிப்பிடலாம்.
நுளம்பர் காலத்து கோவில்
இக்கோயிலில் பல்லவர்கள் வம்சாவளியில் வந்தவர்களாக கருதப்படும் கோண்டு இன பிரிவில் ஒரு பிரிவரான நுளம்பர் அல்லது நொளம்பர் என்று அழைக்கப்பட்ட வம்சத்தால் கட்டப்பட்டதாகும். இக்கோயிலை கட்டியவர்கள் பற்றிய கல்வெட்டு குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் தகடூர் பகுதியினை கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் ஆண்ட மகேந்திர நுளம்பன் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மல்லி நாதர் கோயில் என்பது மருவி மல்லிகார்ஜுன சுவாமி கோவில் என்று வந்திருக்கலாம். ஏனெனில் இது ஒரு சமண கோயிலாக இருந்திருக்க வாய்ப்புள்ளது என்று சிலர் குறிப்பிடுகின்றனர். கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோவிலில் கருவறை அர்த்தமண்டபம் ஆகியவை நு லம்பர் காலத்தில் முன் மண்டபம், மகா மண்டபம், விமானம் ஆகியவை பிற்காலத்து அமைப்பை தொடர்ந்து நீண்ட உருளை போன்ற பளபளப்பான எண் பட்டை அமைப்பை கொண்டுள்ளது.
மிக நுண்ணிய அழகான சிற்பங்கள்
இத்தூண்களில் சிறிய படைப்பு சிற்பங்கள் மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்தூண்களில் நான்கில் ஒரு தூண் தொங்கிய தொங்கிக் கொண்டிருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருப்பது பொறியியல் அதிசயமாக கருதப்படுகிறது. இந்தியாவில் ஆந்திர பிரதேசம் அனந்தபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள லேபாக்ஸி கிராமத்தில் உள்ள வீரபத்ர கோவிலும் இத்தகைய தொங்கும் தூண் காணப்படுகிறது. ஆனால் அவை மண்டபத்தில் உள்ள ஏராளமான தூண்களில் ஒன்றாக இருப்பதால் வேறுபாடு தெரியவில்லை.
ஆனால் தர்மபுரி மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் அமைந்துள்ள தொங்கும் தூண் உலக அதிசயமாக கருதப்படுகிறது. ஏனெனில் இக்கோயில் மற்ற மூன்று தூண்களில் மட்டுமே நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டரை டன் எடையுள்ள தொங்கும் தூண்
சுமார் இரண்டரை டன் எடையுள்ள இந்த தூண் தொங்கி கொண்டிருக்கிறது என்பதை தூணுக்கும் கீழே அடிப்பகுதிக்கும் இடையில் இரண்டு சென்டிமீட்டர் அளவுள்ள இடைவெளி தெளிவுபடுத்துகிறது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலாக தூண்கள் தொங்கிக் கொண்டிருப்பது அதிசயமாக பார்க்கப்படுகிறது.
இத்துணில் பல்வேறு படைப்பு சிற்பங்களும் காணப்படுகின்றன. குறிப்பாக தொங்கும் தூணில் ஒரு பக்கத்தில் ஒரு வீரன் திரிசூலத்தின் மேலே தலைகீழாக விழும் போது காமாட்சி தேவி தன் கையை அதன் மீது வைத்து அவனை காப்பாற்றியதை குறிக்கும் சிற்பம் காணப்படுகிறது. மேலும் சிவன் கோயிலில் பெருமாள் அம்சமான நரசிம்மர் இருப்பதை அரிதான ஒன்றாகும்.
சிவன் சிற்பம்
இங்குள்ள தூண் ஒன்றில் நரசிம்ம அவதாரம் உள்ளது. பூ வேலைப்பாடுகளும் நுணுக்கமாக காட்டப்பட்டுள்ளன. சிவன் யானையின் தோலை உரித்து நின்று நடனமாடும் வகையிலும் ஒரு சிற்பம் அமைந்துள்ளது. இத்தூணியில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் சுமார் 4 அங்குலம் அளவிற்கு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் அனைத்தும் தெளிவாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்கோயிலின் நுழைவாயிலின் மேல் பகுதியில் கஜலட்சுமி படைப்பு சிற்பமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு யானை நீர் தெளிக்கும்போது மற்றொரு யானை காத்திருந்து நீர்த்துளிப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. வித்யாசமான அணுகு முறையாகும் மேலும் இந் நுழைவாயிலின் முன் பகுதியில் அமைந்துள்ள சிற்பங்களை நன்றாக உற்று கவனித்தால் ஒரு புறம் சுந்தரம் உள்ள தூண்களில் சிவலிங்கத்தின் அடிமுடி காண இயலாத பூவராக மூர்த்தியாக பெருமாளும் பிரம்மாவும் வணக்கம் செலுத்தும் வகையில் சிற்பங்கள் காணப்படுகின்றன. இத்தகைய சிற்பம் தஞ்சை பெரிய கோவிலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மண்டபத்தின் பிரதான ஒன்பது பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மையப்பகுதியில் சிவன் எட்டு கரங்களுடன் ஆடல் வல்லவனாக காட்டப்பட்டுள்ளான். இவரை சுற்றிலும் எட்டு திசையிலும் திசை கூறிய எட்டு காவலர்கள் தங்களுடைய வாகனத்தின் மேல் அமர்ந்த நிலையில் காணப்படுகின்றனர். நடராஜன் கையில் சூலம், உடுக்கை, அபயம், பாசம், நெருப்பு போன்றவை கட்டப்பட்டுள்ளன.
கர்நாடகா ஆந்திரா தமிழ்நாடு தொடர்புகள் உள்ளது
இத்தகைய விதானங்கள் கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநில கோயில்களில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சோழர் காலத்து கலை அம்சமாக கருதக்கூடிய கர்நாடகாவில் பெங்களூருக்கு அருகே உள்ள நந்தி மலையின் அடிவாரத்தில் உள்ள யோகநந்தீஸ்வரர் கோவிலில் இத்தகைய சிற்பங்கள் காணப்படுவது சோழர்கள் மற்றும் கர்நாடக நுளம்பர்கள் இடையே உள்ள தொடர்பை காட்டுகிறது.
இது குறித்து தர்மபுரி அரசு கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் சந்திரசேகர் வரலாற்று ஆய்வாளரான கல்லூரி மாணவர்கள் இளந்திரையன் ஆகியோர் கூறியதாவது:-
தர்மபுரி கோட்டை காமாட்சி அம்மன் கோவில் மல்லிகார்ஜுன சுவாமி கோயிலுக்கு வடக்கில் அமைந்துள்ளது. பெரும்பாலும் அம்மன் கோவில்கள் தெற்கு நோக்கி அமைக்கப்படும் நிலையில் இங்கு கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இறைவனின் கோயிலை விட அன்னையின் சன்னதி உயர்ந்த நிலையில் உள்ளது இங்கு மட்டுமே காணப்படுகிறது.
அம்மன் கோவிலில் அதிட்டானத்தை யானைகள் தாங்குவது போன்று நான்கு பக்கங்களிலும் 18 யானைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் அம்மன் கோவிலில் இடது புறம் சற்று சாய்ந்த நிலையில் உள்ளது போல கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பெண்களுக்கு உத்தியோகத்துவம் கொடுத்த தருமபுரி
அதாவது வடக்கே காந்தப்புலம் அதிகம் என்பதால் பூமி தெற்கிலிருந்து வடக்காக சற்று சாய்ந்து உள்ளது என்பதை காட்டுவது போல கட்டப்பட்டுள்ளது. இவற்றை தாங்கி நிற்கும் யானை முழு பலமும் தனது தலையில் சுமத்தினால் எவ்வாறு சிரமப்படுமோ அதுபோல அதனுடைய கண்கள் வெளியில் பிதுங்கி நிற்பது போன்று துதிக்கைகள் மடிந்து வலுவான ஒன்றை தன் தலையில் தாங்கி இருப்பது போன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
சிற்பியின் கற்பனை திறனையும், கலைநயத்தையும் விளங்கவல்லது போன்ற உள்ளது. அதுபோல் தென் திசையில் குபேர மூலையில் அமைந்துள்ள யானைக்கு மற்றும் மிக அழகான வேலைப்பாடுகள் அணிகலன்கள் காட்டப்பட்டுள்ளது. தென் திசைக்கு அதிபதியான குபேரனின் செல்வ செழிப்பை காட்டுவதாக அமைத்துள்ளார்கள்.
சிற்பி கோவிலின் அஷ்டானத்தில் ராமாயண காட்சிகள் புடைப்பு சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அம்மன் கோவிலிலும் ஒரு தொங்கு தூண் இருந்தது அவை நாளடைவில் மறு தீர்மானம் செய்தல் மற்றும் புனரமைப்பின் போது கீழ்ப்பகுதி அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோயிலில் சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்க காலத்தை சேர்ந்த இரண்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றின் காலம் கிபி 12 மற்றும் 13ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். இது குலோத்துங்க சோழனின் 12 ஆம் ஆட்சி ஆண்டில் வெட்டப்பட்டதாகும். மேலும் அதியமான் காலத்தில் இக்கோட்டை கோவில் இருந்து அதியமான் கோட்டை சென்றாய பெருமாள் கோயில் வளாகம் வரை ஒரு ரகசிய சுரங்கப்பாதை இருந்ததாகவும் கருதப்படுகிறது.
எப்பொழுதுமே பெண்களுக்கு அதிக முக்கிய தரும் பகுதியாக தகவல் ஒரு பகுதி விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. ஔவையார் நீண்ட நாள் வாழ வேண்டும் என்பதற்காக தனக்கு கிடைத்த கரு நெல்லிக்கனியை தான் உண்ணாமல் தமிழ் வாழ வேண்டி அவ்வையாருக்கு அளித்த வரலாற்றில் அழியாத நீடூழி புகழ்கொண்டான் அதியமான் இறைவன் சன்னதியை விட உயரமான அம்மன் சன்னதியை அமைத்துள்ள இடம் தர்மபுரி.
இன்று தமிழக அரசும் தருமபுரி பெண்களுக்கு முக்கியத்துவம்
காமாட்சி அம்மன் கோவில் மட்டுமே மகளிர் தொட்டில் குழந்தை திட்டமும், மகளிர் சுய உதவி குழு திட்டமும், மகளிர் உரிமைத்தொகை திட்ட பதிவு முகாமும் முதன்மை முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட பகுதி தர்மபுரி தான் என்பது குறிப்பிடத்தக்கது இவ்வாறு அவர் கூறினார்.