கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் நெடுமான் அஞ்சு ஆட்சி செய்த பெருமைக்குரிய தகடூர் நாடே காலத்தின் சுழற்சியால் தருமபுரியாக உருமாறி நிற்கிறது. 




கடையேழு வள்ளல்கள் வாழ்ந்த தகடூர் நாடு


கடையேழு வள்ளல்கள் ஆண்ட இந்த தகடூர் நாடு போர்களுக்கு தயார் செய்யும் ஆயுதங்கள் மிகவும் தரமானதாகவும், இங்கே வாங்கக்கூடிய தகடுகள் மிகவும் உறுதி வாய்ந்ததாகவும் இருக்குமாம்.


தரம் வாய்ந்த தகடுகள் இங்கு தான் கிடைக்கும்


 அதனால் போர் புரியும் கருவிகள் ஈட்டி, அம்பு உள்ளிட்டவைகளை செய்வதற்காக இந்த தகடூர் நாட்டிற்கு  அதிக அளவில் படை வீரர்கள் வருவார்கள் என்றும், இங்கே வலுவான தரமான தகடுகள் கிடைப்பதனால் தகடூர் நாடு என்று இதற்கு பெயர் பெற்று, தகடூர் நாடு என்றும் அழைக்க பெற்று வந்தது. 


ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்த அதியமான்


இந்த தகடூர் நாட்டில் அதியமான் ஆட்சி செய்து வந்த காலத்தில் பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறை காய்க்கும் அதிசய நெல்லிக்கனியை ஒருவர் அதியமான் அரசருக்கு கொடுக்க வந்தார். அப்பொழுது அரசே,  இது 12 வருடத்திற்கு ஒரு முறை கிடைக்கும் அரியவகை நெல்லிக்கனி. இதை தாங்கள் உண்டால் ஆயுள் அதிகரிக்கும் என்று இந்த அரிய  வகையான நெல்லிக்கனியை அரசருக்கு கொடுத்துள்ளார்.


அப்பொழுது அரச அவையில் இருந்த அதியமான், அவ்வை பாட்டியை வரச் சொல்லி, அப்பொழுது அவ்வை பாட்டிக்கு அந்த நெல்லிக்கனியை அதிமான் அரசர் வழங்கினார். அப்பொழுது அரசு அவையில் இருந்தவர்கள், ஏன் இந்த அரியவகை நெல்லிக்கனியை அவ்வை பாட்டிக்கு கொடுக்கிறீர்கள் என கேட்டபோது, அவ்வை பாட்டி இன்னும் நீண்ட காலம் ஆயுளோடு வாழ்ந்தால் தான், நமது தமிழ் பெருமை வளரும். அதனால் இந்த நெல்லிக்கனியை அவ்வை பாட்டி தான், உண்ண வேண்டும் என்று அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்ததார்.  தமிழ் வளர வேண்டும் என்று நெல்லிக்கனியை அதியமான் அவ்வைக்கு  தர்மம் புரிந்ததால் (கொடுத்ததால்) இதற்கு தர்மபுரி என்று பெயர் பெற்றது. 


இலக்கிய நூல்களில் இடம் பெற்ற நெல்லிக்கனி


  நெல்லிக்கனி வழங்கிய அதியமான் குறித்து புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, சிறுபானாற்றுப்படை போன்ற சங்க இலக்கிய நூல்களில் குறிப்புகள் இடம் பெற்றுள்ளது. காலம் கடந்தும் தர்மபுரியை வரலாற்றில் இடம்பெறச் செய்யும் என்பது நிதர்சனம்.


ஆனால் பிற்காலத்தில் சேர மன்னன், பெருஞ்சேரல் இளம்புறையால், அதியமான் மகன் புகட்டெழினி தோற்கடிக்கப்பட்டார். சேரர்களின் ஆட்சிக்கு பிறகு நுலம்பர், சோழர் மீண்டும் அதியமான் ஹோய்சாளர்கள், விஜயநகர மன்னர்களின் ஆட்சியில் தகடூர் நாடு இருந்தது. 17 ஆம் நூற்றாண்டில் பிஜாபூர் சுல்தான்களின் ஆளுமையின் கீழ் கொண்டுவரப்பட்டது. 1652 முதல் 1768 வரை மைசூர் மன்னர்களின் மேலாண்மையின் கீழ் இருந்தது. இந்த காலகட்டத்தில் தான், கன்னடர்கள் பெருமளவில் இங்கு குடியேறினர்.


18-ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஆங்கிலத் தளபதி ஃபுட் என்பவர், பிரிட்டிஷ் இந்திய பகுதிக்குள் தர்மபுரியை கொண்டு வந்தார்.


சேலம் மாவட்டத்தின் முக்கிய பகுதியாக இருந்த தர்மபுரி


 அதன் பிறகு சேலம் மாவட்டத்தின் முக்கிய மையமாக தர்மபுரி விளங்கியது. 1965 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி சேலத்தில் இருந்து தர்மபுரி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. அப்போது ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் அரூர் தாலுகாக்களை உள்ளடக்கிய மாவட்டமாக இருந்தது. இப்படி மன்னராட்சியில் பெருமை சேர்த்த தருமபுரி, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அடிமை விலங்குகளை உடைத்து எறிந்து மக்களாட்சிக்கு வித்திட்ட போராட்ட களமாகவும் நிகழ்ந்தது.


 திண்டுக்கல்லில் பிறந்த வீர தியாகி சுப்பிரமணிய சிவா, வெள்ளைக்கார ஆஷ் துறையை தீர்த்துக்கட்ட, ஆயுதமான மாவீரன் தீர்த்தகிரி, மகாத்மாவின் ஒப்பற்ற சீடராக இருந்த ராஜாஜி என்று பலர் இந்த மண்ணில் பிறந்தும் வாழ்ந்தும் வரலாறு படைத்திருக்கின்றனர்.