கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து  அதிகரிப்பால், காவிரி ஆற்றில் 1.40 கன அடியாக மீண்டும் நீர்திறப்பு அதிகரிப்பு-இரண்டாவது முறையாக வெள்ளப்பெருக்கு மாவட்ட நிர்வாக ஒலிப் பெருக்கி மூலம் எச்சரிக்கை. 




காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வந்தது. இதனால் கர்நாடக அணைகளாக கபனி மற்றும் கிருஷ்ணராஜ் சாகர், ஹேமாவதி, ஹாரங்கி, நுகு உள்ளிட்ட அணைகள் முழுவதுமாக நிரம்பியது.


இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி, காவியி ஆற்றில் தமிழகத்திற்கு உபரிநீர் வினாடிக்கு 1.65 இலட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வினாடிக்கு 1.60 லட்சம் கன அடி தண்ணீர் வந்தது.


இதனால் காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டவாறு, வெள்ளம் கரை புரண்டோடியது. இந்த வெள்ளப் பெருக்கால் ஒகேனக்கல் பகுதியில் பிரதான அருவிக்கு செல்லும் நடைப் பாதை, பாறைகள், அருவிகள் தண்ணீரில் மூவ்கி  வெள்ளக்காடாய் காட்சியளித்து வந்தது.


மேலும் கடந்த 16 நாட்களாக நீர்வரத்து அதிகரிப்பால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல்லில் பரிசலியக்கவும்,  சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, தாழ்வான பகுதியில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் ஒலிப் பெருக்கிகள் மூலமாக ஒகேனக்கல், ஊட்டமலை, ஆலம்பாடி, நாடார் கொட்டாய் உள்ளிட்ட இடங்களில் அறிவுறுத்து வந்தது. 


இந்த நிலையில் மழைக் குறைந்ததால் கர்நாடகா அணைகளுக்கு வருகின்ற நீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறக்கப்படுகின்ற நீரின் அளவு 1.65 இலட்சம் கன அடியில் இருந்து 41,000 கன அடியாக குறைக்கப்பட்டது.


இதன் பிறகு அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அணையில் சிறப்பு பூஜை நடத்தி, வழிபாடு செய்தார்.  தற்போது வயநாடு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால்  கபினி அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. 


இதனால் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கான நீர் திறப்புநேற்று மாலை 78,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.


இன்று மேலும் நீர்திறப்பு அதிகரித்து மீண்டும் வினாடிக்கு 78,000 கன அடியிலிருந்து 1.40 இலட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி காவிரி ஆற்றில் தமிழக எல்லையாக பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 24,000 கன அடியாக குறைந்திருந்த நிலையில், தற்போது படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 75,000 கன அடியாக உயர்ந்துள்ளது.


மேலும் நேற்று மாலை திறக்கப்பட்ட 78,000 கன அடி தண்ணீரும் இன்று மாலைக்குள் தமிழக எல்லையை வந்தடையும். மேலும் நாளை காலை முதல் மீண்டும் நீர்வரத்து அதிகரித்து இரண்டாவது முறையாக காவிரி ஆற்றில்  ஒரு இலட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்படும். இதனால் காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தி, ஒலிபெருக்கி மூலமாக ஆங்காங்கே வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.