விண்ணை தொடும் விஞ்ஞான யுகத்திலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளும், பாலியல் வன்புணர்வுகளும் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருப்பது வேதனையின் உச்சம்.
பெண்கள் மட்டும் சிறுமிகளுக்கான கொடுமைகள் என்பது உலகின் பொதுவான மனித உரிமை மீறல்களில் ஒன்றாகவே உள்ளது. உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஏதாவது ஓரிடத்தில் இது போன்ற துயரங்கள் இன்றளவும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இதில் இந்தியாவைப் பொறுத்தவரை பெண்களுக்கு எதிரான இரு சம்பவங்கள் கடந்த சில தினங்களில் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி இருக்கிறது. ஒன்று கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டது.
மற்றொன்று மகாராஷ்டிராவின் பத்ரா போரில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானது. அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இவ்விரு பாலியல் வன்புணர்வு சம்பவங்களும் ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகள் இருவருடைய பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது.
பொதுவாக இத்தகைய சம்பவங்கள் நடக்கும் போது பெண் குழந்தைகளின் பாதுகாப்பை மையப்படுத்தி விவாதங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். ஆனால் சமீப தினங்களாக ஆண் குழந்தைகள் வளர்ப்பில் கவனம் செலுத்துவதே இத்தகைய சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் முக்கியத்துவம் வாய்ந்தது என்று குரல் ஆரம்பித்துள்ளன.
சமூக ஊடகங்களில் ஊடகங்களில் அது குறித்து விவாதங்களும் ஆண் குழந்தை வளர்ப்பு தொடர்பான கவுன்சிலிங், கருத்தரக்குகள் அமர்வு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே நடை பெறுகின்றன.
சமூக ஊடக இன்புளுயன் சர்க்கல் சிலரும் ஆண் குழந்தைகள் வளர்ப்பு குறித்து பேச ஆரம்பித்துள்ளனர். பாலியல் பாகுபாடு பார்க்காத குழந்தை வளர்ப்பே எதிர்காலத்தில் இதுபோன்ற அவலங்களுக்கு தீர்ப்பு தரும் என்பது அவர்கள் முன்வைக்கும் பொதுவான காலடியாக உள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலரும் தமிழ்நாடு விதவைகள் மற்றும் ஆதரவற்றோர் நல வாரிய உறுப்பினருமான ரேணுகா கூறியதாவது:-
தனிமனித ஒழுக்கத்தால் மட்டுமே பாலியல் பாகுபாடுகள் ஒலிக்க முடியும். ஆண் குழந்தை வளர்க்கும் பெற்றோர் இதை வீட்டிலிருந்தே துவங்க வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர்கள் தான் ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும் என்று பெற்றோர் மெத்தனமாக இருக்கக் கூடாது.
தனது தாய் சகோதரிகளுக்கு ஒரு துன்பம் நேர்ந்தால் எப்படி உணர்வீர்களோ அதைப்போல் பிற பெண்களையும் என்ன வேண்டும் என்ற சிந்தனையை அவர்களுக்குள் விதைக்க வேண்டும். ஆண் பெண் என்ற வித்தியாசத்தை வீட்டில் காட்டக்கூடாது.
அதே நேரத்தில் மூன்று வயது ஒரு பெண் குழந்தை இடம் எப்படி நட்பு பாராட்ட வேண்டும், 13 வயதில் அதே பெண் குழந்தையிடம் எப்படி பழக வேண்டும் என்பதையும் தெளிவாக புரிந்து வைக்க வேண்டும்.
குறிப்பாக காதலுக்கும், அன்புக்கும் உள்ள வித்தியாசத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். எந்த வயதில் அவர்கள் மனதில் உருவானது உண்மையான காதலாய் இருக்கும் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும். கேட்டவுடன் கேட்ட பொருளை வாங்கிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். செல்போனில் உள்ள நவீன பொருட்களை பயன்படுத்தும் வயது அவர்களுக்கு உள்ளதா? குறிப்பாக அது அவர்களின் கல்விக்கு அறிவு வளர்ச்சிக்கும் பயன்படுகிறதா? என்பதை உறுதி செய்து வாங்கி கொடுக்க வேண்டும்.
இவை அனைத்திற்கும் மேலாக பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு பிணைப்பு இருக்க வேண்டும். அவர்களது தேவைகளை கண்டறிந்து மனநிலையை அறிந்து வைத்திருக்க வேண்டும். வீட்டில் கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுத்து பிள்ளைகளை வழி நடத்தினால் தனி மனித ஒழுக்கம் என்பது தானாக வரும் இவ்வாறு கூறினார்.
மரியாதையை கற்றுத் தருதல் முக்கியம்
ஆண் குழந்தை வளர்ப்பில் முக்கியமானது. மரியாதை கற்றுக்கொள் கற்றுத் தருவது தான் இதற்கு வீட்டில் உள்ள மற்ற பெண்களை எப்படி மரியாதையாக நடத்துகிறோம என்பதே முக்கியம்.
அப்படி மரியாதையாக நடத்தினாலே பிரச்சனைகள் வராது வீட்டு வேலைகளில் ஆண் பெண் பாகு பார்க்கக் கூடாது மகளைப் போன்று வீட்டு வேலைகளில் என் மகனையும் பங்கெடுத்துச் செய்ய வேண்டும் தொடுதல் குறித்த அடிப்படை புரிதலை ஏற்படுத்த வேண்டும் சக தோழிகளிடம் ஏற்படும் ஈர்ப்பு குறித்தும் புரிய வைக்க வேண்டும் குழந்தைகளிடையே அதிகரித்து வரும் டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடுகளும் சவாலாக உள்ளது பள்ளிகளிலும் அவர்களது நடத்தைகள் குறித்து அச்சம் இருந்தால் கண்டறிய வேண்டும் இதுபோன்ற செயல்பாடுகள் சிறந்த மனிதராக ஆண் குழந்தைகளை வளர்ப்பதற்கு வழிவகுக்கும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்
உடல் மாற்றங்களை புரிய வைக்க வேண்டும்
ஆண் குழந்தைகளுக்கு உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பெற்றோர்கள் புரிய வைக்க வேண்டும் 8, 9 வயதை தாண்டும் போது குழந்தைகளை தனியறையில் உறங்க வைக்க வேண்டும் அப்போதுதான் அவர்களுக்கு தங்களை குறித்த புரிதல் வரும் தனி மனிதர்களாக வருவார்கள் அவர்களுக்கு புரியாத விஷயங்களை வெளியில் இருந்து பெற்றோர்கள் வழி காட்ட வேண்டும் .
எதிர் தரப்பில் உள்ளவர்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் அதை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். தினமும் நடைமுறை உதாரணம் உதாரணங்களிலிருந்து இதை பழக்க வேண்டும். பிடித்தது வேண்டுமென்றால் அதை கொடுத்து பழக்கக்கூடாது. அடுத்தவர் விருப்பங்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்க்க வேண்டும் என்பதும் பெண்ணிய மேம்பாட்டு அமைப்புகள் முன்வைக்கும் கோரிக்கைகள்