பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க வேண்டும் என  தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி அதிரடி பிறப்பித்துள்ளார்.


தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை ஆறு மாதமாக மழை பெய்யவில்லை. தண்ணீர் இன்றி வறண்ட நிலையில் கோடைகால மழையாக கடந்த மே மாதம் மட்டும் 127.77 மில்லி மீட்டர் மழை தர்மபுரி மாவட்டத்தில் பெய்துள்ளது.


கடந்த ஆண்டு மே மாதத்தை ஒப்பிடுகையில் நடப்பாண்டு மே மாதத்தில் 27.58 மில்லி மீட்டர் மழை கூடுதலாக பெய்துள்ளது. மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 942 மில்லி மீட்டர் ஆகும். ஆனால் இதுவரை 232.46 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது.  


கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை 266.30 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் 232.46 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. இந்த நிலையில் தருமபுரி மாவட்ட அலுவலக கூட்டரங்கில் தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுக்காக உடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமை வகித்து பேசியதாவது:- தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது இம்மலையொட்டி தாழ்வான பகுதிகளின் விவரப்பட்டியல்,  அவசரகால போக்குவரத்து வழித்தடங்கள், போக்குவரத்து உறுதிகள் விவரங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.  தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகள் பற்றிய விவரப்பட்டியல் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சமுதாயக்கூடங்கள், திருமண மண்டபங்கள் பற்றிய விவரப் பட்டியல் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொது மக்களுக்கு குடிநீர் விநாயகம் செய்ய தேவையான வாகனங்கள் தண்ணீர் டேங்குகள் போர்ட்டபிள் ஜெனரேட்டர்கள், டார்ச் லைட்டுகள், உணவு சமைக்க பாத்திரங்கள், கேஸ் அடுப்புகள், ரேஷன் கடைகளில் தேவையான உணவுப் பொருட்களின் இருப்பு ஆகிய தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். எங்காவது சேதம் அடைந்தால் மீட்பு பணிக்கு பொக்லைன் புள்டவுசர்கள், மரங்களை வெட்டும் இயந்திரங்கள், போர்ட்டபிள் ஜெனரேட்டர்கள், டார்ச் லைட் நல்ல நிலையில் பராமரித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.  சாலைகளில் மழைநீர் தேங்காத வண்ணம் முன்கூட்டியே சீர்படுத்த வேண்டும் அணைக்கட்டுகள் ஏரிகளின் தரைப்பகுதிகளில் தேவையான அளவிற்கு மணல் மூட்டைகளை அடக்கி தயார் நிலையில் வைக்க வேண்டும்.  


அவசர காலங்களில் உதவ  சுய உதவி குழுக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பட்டியல் தொலைபேசி எண்கள் பட்டியல் தயார் நிலையில் வைக்க வேண்டும்.  நடமாடும் மருத்துவ குழுக்கள் அவர்களின் தொலைபேசி எண் விவரங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மழைக்காலம் தொடங்கும் முன்னரே குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கா வண்ணம் சாலைகள் சீர்படுத்த வேண்டும். கழிவு நீர் கால்வாய்களை தூர்வார வேண்டும் தெருக்களில் கொசு ஒழிப்பு மருந்து அடித்து குளோரின் பவுடர் தூவியும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து குடிநீர் கிணறுகள் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் சுத்தப்படுத்தி குளோரின் பவுடர் கலந்து குடிநீர் விநாயகம் செய்ய வேண்டும். கால்நடைகள் உயிர், மனித உயிர் சேதம் ஏற்படாது உடனடியாக நிவாரண உதவிகள் வழங்க பிரேத பரிசோதனை அறிக்கை உடனடியாக வழங்க வேண்டும் மேலும் அவசர தேவைகள் உதவிகள் பேரிடர் கால வீடு, கால்நடை, மனித உயிரிழப்பு போக்குவரத்து பாதிப்பு சேதங்கள் பற்றிய தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் கட்டுப்பாட்டு மைய இலவச தொலைபேசி எண்-  10 77 இல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.