krishnagiri power Cut : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (21.01.2026, ) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஓசூர் துணை மின் நிலையம்
டி.வி.எஸ். நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டான் டவுன்ஷிப், காடிபாளையம், குதிரைபாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூர், சிவக்குமார் நகர், கொத்தூர், கொத்தக்கொண்டப்பள்ளி, பொம்மாண்டப்பள்ளி, முனீஸ்வர் நகர், ஆதவன் நகர், துவாரகா நகர், மத்தம், நியூ ஹட்கோ, பழைய ஹட்கோ, மகாலட்சுமி நகர் பகுதி- 1, 2, ராம் நகர், பஸ் ஸ்டாண்ட்.ஸ்ரீ நகர், அப்பாவு நகர், காமராஜ் காலனி, அண்ணா நகர், டைட்டான் இண்டஸ்ட்ரீஸ், அசோக் லேலண்ட் யூனிட் 1, சிப்காட் ஹவுசிங் காலனி (பகுதி), நேதாஜி நகர், சின்ன எலசகிரி, பாலாஜி நகர், ஆனந்த் நகர், சாந்தபுரம், அரசப்பட்டி, என்.ஜி.ஜி.ஓ.எஸ். காலனி, கே.சி.சி. நகர், சூர்யா நகர், பிருந்தாவன் நகர், அண்ணாமலை நகர், கிருஷ்ணா நகர்.
சிப்காட் பேஸ் 2 துணை மின் நிலையம்
சிப்காட் பகுதி-2, பத்தலப்பள்ளி, பென்னாமடம், எலக்ட்ரானிக் எஸ்டேட், குமுதேப்பள்ளி, மோர்னப்பள்ளி, ஏ.சாமனப்பள்ளி, ஆலூர். புக்கசாகரம், அதியமான் கல்லூரி, கதிரேப்பள்ளி, மாருதி நகர், பேரண்டப்பள்ளி, ராமச்சந்திரம், சுண்டட்டி, அங்கேப்பள்ளி.
ராயக்கோட்டை துணை மின் நிலையம்
ராயக்கோட்டை நகரம், ஒன்னம்பட்டி, எச்சம்பட்டி, பி.அக்ரஹாரம், காடுமஞ்சூர், புதுப்பட்டி, முகலூர், கொப்பக்கரை, தேவனம்பட்டி, கிட்டம்பட்டி, பெட்டம்பட்டி, வேப்பலம்பட்டி. லட்சுமிபுரம், முத்தம்பட்டி, தின்னூர், கருக்கனஹள்ளி, எருவஹள்ளி, நல்லூர், தொட்டதிம்மனஹள்ளி, போடம்பட்டி, பில்லாரி அக்ரஹாரம், சஜ்ஜலப்பட்டி, லிங்கனம்பட்டி, திம்ஜேப்பள்ளி.
உத்தனப்பள்ளி துணை மின் நிலையம்
உத்தனப்பள்ளி, அகரம், தியானதுர்க்கம், நாகமங்கலம், நல்லராலப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, உள்ளுக்குறுக்கை, போடிச்சிப்பள்ளி, காடு உத்தனப்பள்ளி, இருதாளம், வரகானப்பள்ளி, டி.கொத்தப்பள்ளி, கெலமங்கலம், அனுசோனை, கடூர், பொம்மதாத்தனூர், சின்னட்டி. கனகூர், டி.கொத்தூர், பைரமங்கலம், ஜக்கேரி, பச்சப்பனட்டி, பேவநத்தம், அலசட்டி, பஞ்சாட்சிபுரம், டி.குருபரப்பள்ளி, தேவகானப்பள்ளி, சீபம், சாமனப்பள்ளி, சின்னப்பேட்டகானப்பள்ளி, கீரனப்பள்ளி, பாலேகுளி, சானமாவு.
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
மின்சார நிறுத்தம்
மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.