krishnagiri power Cut : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (23.01.2026,) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேன்கனிக்கோட்டை துணை மின் நிலையம் பராமரிப்பு பணி:
பாரந்தூர், நாகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, கூலிசந்திரம், முதுகானப்பள்ளி, செட்டிப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளி, அலசட்டி, பஞ்சாட்சிபுரம், தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், நெகனூர், குந்துக்கோட்டை, அந்தேவனப்பள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஒசட்டி, கண்டகானப்பள்ளி, பாலதொட்டனப்பள்ளி, பேளூர், மருதானப்பள்ளி, தண்டரை, பென்னங்கூர், திம்மசந்திரம், அரசகுப்பம், பெட்டமுகிலாளம்.
கெம்பட்டி துணை மின் நிலையம் பராமரிப்பு பணி :
கெம்பட்டி, பேலகொண்டப்பள்ளி, மதகொண்டப்பள்ளி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உளிவீரனப்பள்ளி, ஒன்னட்டி, உப்பாரப்பள்ளி, ஜாகீர்கோடிப்பள்ளி, தளி உப்பனூர், குருபரப்பள்ளி, கே.அக்ரஹாரம், குப்பட்டி.டி.கொத்தூர், நல்லசந்திரம், தாரவேந்திரம், பி.பி.பாளையம், ஜவளகிரி, அகலக்கோட்டை, கல்லுபாலம், பி.ஆர்.தொட்டி, மானுபள்ளி, கெம்பத்தப்பள்ளி, உனிசநத்தம், பின்னமங்கலம், அன்னியாளம், கக்கதாசம். ஆகிய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
மின்சார நிறுத்தம்
மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.
