தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சியிலும் சமூக நீதியை நிலைநாட்டும் விதமாகவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு சென்னையில் தொடங்கி வைத்தார். தொழிற்சாலைகளுக்கான நிலம், கட்டிடம், இயந்திர தகவல்கள் மற்றும் சுழற்சிக்கான நடைமுறை மூலதனம் ஆகியவற்றின் மதிப்பில், 36 சதவீதம் முதலீட்டு மானியத்துடன் கூடிய கடன் பெற்றிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் ஆறு சதவீத வட்டி, மானியம் 10 ஆண்டுகள் வரை வழங்கப்படுகிறது. பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்தவர்கள் பயனாளிகள், 100% பட்டிலினத்தை சேர்ந்தவர் மற்றும் பழங்குடியினர் நபர்களுக்கு மட்டுமே பயனடைய முடியும். இந்த திட்டத்தில் தொகை 65 சதவீதம், வங்கி கடன் 35 சதவீதம், அரசு மானியம் 1.5 கோடிக்கு மிகவும், பத்து ஆண்டுகளுக்கு மிகாமல் கடன் தொகை திருப்பி செலுத்தும் காலப் பகுதியில் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கான கடனுக்கான, ஆறு சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் துவக்கமாக மாவட்ட கலெக்டர் சராயோ தலைமையில் மூன்று மாவட்ட அளவிலான தேர்வு குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு, 75 கடன் விண்ணப்பங்கள் பரிந்துரைக்கப்பட்டது. இதில் மாவட்டத்தில், இந்த திட்டத்தின் கீழ் 2023 24 ஆம் ஆண்டில் 20 பயனாளிகளுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அவற்றில் 19 பயனாளிகளுக்கு ஆட்டோமொபைல் உதிரி பாகம், பல் மருத்துவமனை, பாக்கு மட்டை உற்பத்தி, பேக்கரி, போட்டோ ஸ்டுடியோ, எர்த் மூவர்ஸ், சுற்றுலா கார், லாரி ஆகிய தொழில்கள் தொடங்க 7 கோடியே 31 லட்சம் வழங்கப்பட்டது. இதில் பயனாளிகள் கடனுக்கு, கடன் உதவிக்கான மானிய தொகை இரண்டு கோடியே 26 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஓசூர் மாநகராட்சியில் வசித்து வரும் பயனாளிகளான பல் மருத்துவர் நிர்மலா கூறுகையில், நான் பல் அறுவை சிகிச்சை குறித்து, இளங்கலை பட்டம் படித்து தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தேன். எனக்கு சொந்தமாக பல் மருத்துவமனை தொடங்க சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்தது. ஆனால் அதற்கு என்னிடம் போதிய பண வசதி இல்லை. இந்த நிலையில் தமிழக முதல்வர் தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் என்ற மகத்தான திட்டத்தை துவங்கி வைத்தார்.
இந்த திட்டம் குறித்து விவரங்களை கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மையத்தில் தெரிந்து கொண்டு இணையதளம் வாயிலாக விண்ணப்பித்தேன். எனக்கு வங்கி மூலம் 49 லட்சத்து 19,925 கடன் உதவியும் அதில் 17 லட்சத்தி 21, மானியத் தொகையும் கிடைத்துள்ளது. தொகையினை வைத்து பல் மருத்துவமனை வெற்றிகரமாக நடத்தி வருகிறேன். என்னை போன்று பெண்கள் சொந்தமாக தொழில் துவங்க சமுதாயத்தில் சிறப்பாக உயர வழிவகை செய்த தமிழக முதல்வருக்கு எனது உள்ளம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இதே போல் பர்கூர் தாலுகா பாலி நாயக்கனஹல்லி அடுத்த மிட்டாரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த பிஏ பிஎட் பட்டதாரியான சந்தோஷ் குமார் 10 லட்சம் கடன் பெற்று அதில் மூன்று லட்சம் மானிய தொகை பெற்று பாக்கு மட்டை தயாரிப்பு தொழிலை செய்து வருகிறார்.