தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு முழுவதும், ஜாக்டோ ஜீயோ சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சரண்டர் விடுப்பு தடை ஆணையை நீக்க வேண்டும். அரசன் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மேலும் 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அரசு பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது உடனடியாக வழங்கிட வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்திலும் முறைப்படுத்த வேண்டும் உள்ளாட்சி அமைப்புகளிலும் பல்வேறு அரசு துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்களை நியமனம் செய்வதை உடனடியாக தடை செய்திட வேண்டும். சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடை கலைத்தல் வேண்டும், சத்துணவு அமைப்பாளர்களுக்கு காலம் முறை ஊதியம் வழங்கப்பட வேண்டும், உயர் கல்விக்கு ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக அரசு எதிராக கன்டண கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தவாறு சாலை மறியலில் ஈடுபடுவதற்காக சென்றனர். அப்பொழுது காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, சாலை மறியலில் ஈடுபடுவதற்கு அனுமதி இல்லை என தெரிவித்து தடுத்து நிறுத்தினர். அப்பொழுது போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அனைவரும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் சேலம் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். அப்பொழுது காவல் துறையினர் கைது செய்வதை அறிந்த சில ஊழியர்கள், அருகில் உள்ள மர நிழலிலும், தேநீர் கடைக்கும் சென்று அமர்ந்தனர். இதனை கண்ட ஜாக்டோ ஜியோ ஊழியர்கள் ஒலிபெருக்கியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைதாகுமாறு அழைப்பு விடுத்தனர். ஆனால் அவர்கள் வராமல் மெல்ல நகர்ந்து சென்றனர். இதனை அறிந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை அருகில் சென்று பேருந்தில் ஏற அழைத்தனர். ஆனால் காவல் துறையை கண்டதும், அவர்கள் அனைவரும் நான்கு புறமும் சிதறி சென்றனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் 200க்கும் மேற்பட்ட வரை காவல்துறையினர் கைது செய்தனர்.