ஓசூர் முதல் பொம்ம சந்திரா வரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை இறுதி செய்வதற்கான ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரியில் நடைபெற்றது.
மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் உள்ளது
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதல் கர்நாடக மாநிலம் பொம்மசந்திரா வரை மெட்ரோ ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான சாத்திய கூறு தொடர்பான அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்த அறிக்கையை இறுதி செய்யும் நடவடிக்கையாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் சித்திக் நேற்று முன்தினம் பெங்களூரு சென்றார். அவர் பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் மகேஸ்வர் ராவை சந்தித்து பேசினார்.
ஓசூர் - பொம்மசந்திரா வரை மெட்ரோ பாதை
அப்போது ஓசூர் பொம்மசந்திரா வரை உள்ள மெட்ரோ பாதையின் முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் இயக்குனர் அர்ச்சுனன் தலைமை பொது மேலாளர் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு லிவிங் ஸ்டோன் எலியாசர், பெங்களூர் மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குனர் ரெட்டி மற்றும் சென்னை பெங்களூர் மெட்ரோ ரயில் நிறுவன ஆலோசகர்கள் கலந்து கொண்டனர்.
நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்ட சென்னை மெட்ரோ ரயில் நிறுவனக் குழுவினர்
தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன குழுவினர் ஆலோசகர் ஓசூரில் நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரியில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் சித்திக் கலந்து கொண்டு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு, ஓசூர் மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த், ஓசூர் உதவி ஆட்சியர் பிரியங்கா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது;-
ஓசூர் - பெங்களூரு செல்லும் இந்தப் பாதையில் 12 மெட்ரோ ரயில் நிலையங்கள் ஒரு பணிமனை ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையும். இன்றைய கூட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வுகள் செய்யப்பட்டன.
12 மெட்ரோ ரயில் நிலையங்கள் ஒரு பணிமனை அமைக்க வாய்ப்பு
இந்தப் பாதையை பன்னிரெண்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் ஒரு பணிமனை ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையும். இன்றைய கூட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் தொடர்பாக ஆய்வுகள் செய்யப்பட்டன என்று அதிகாரிகள் கூறினர்.
இத்திட்டத்தால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி மாவட்ட ஆட்சியர் சரயு கூறியதாவது:-
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஒசூர் - பெங்களூரு இடையேயான போக்குவரத்து இணைப்பு மேம்படுத்தப்படும். இந்த போக்குவரத்து இணைப்பால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயனடைவார்கள். குறிப்பாக கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், தொழிற்சாலைகளில் பணிபுரியவர்கள் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தினால் குறித்த நேரத்தில் குறித்து இடத்திற்கு உடனடியாக செல்வதற்கு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு கூறினார்.