காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை மற்றும் நீர் திறப்பது அதிகரிப்பால், காவிரி ஆற்றில்  நீர்வரத்து மேலும் அதிகரித்து, வினாடிக்கு 12,000 கன அடியில் இருந்து 22,000 கன அடியாக உயர்வு.




கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை


காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் கன மழை பெய்ததால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை இயற்றியது. இதனால் இரண்டு அணைகளில் இருந்தும் குவளை நீராக தமிழகத்திற்கு வினாடிக்கு இரண்டு புள்ளி 50 லட்சம் கன அடி திறக்கப்பட்டது. 


காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு


இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கரைபுரண்டு ஓடியது.  இந்த நிலையில்காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படுகின்ற நீரின் அளவு முற்றிலுமாக குறைக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது.


மேலும் கடந்த 10 நாட்களாக காவிரி ஆற்றில் தமிழக பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 4000 கன அடியாக இருந்து வந்தது.


வினாடிக்கு 21 கன அடியாக திறந்துவிட்ட நீர்


 இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக வனப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படுகின்ற நீரின் அளவு வினாடிக்கு நேற்று காலை 12,000 கன அடியாகவும், மாலை வினாடிக்கே  21,000 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டது.


இந்த நிலையில்  கனமழை மற்றும் நீர் திறப்பு அதிகரிப்பால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீர்வரத்து கடந்த 10 நாட்களுக்குப் பிறகு, இன்று காலை அதிகரித்து,  வினாடிக்கு 4000 கன அடியில் இருந்து 12,000 கன அடியாக உயர்ந்தது.  


மேலும் நீர்திறப்பு அதிகரிப்பால், தொடர்ந்து மாலை மேலும் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 22,000 கன அடியாக அதிகரித்துள்ளது.  இதனால் ஒகேனக்கல் ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.


நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது


 மேலும் தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல் மேட்டூர் அணை நிரம்பி இருப்பதால், ஒகேனக்கல் பகுதியில் தண்ணீர் தேங்கி வருகிறது. 


தொடர்ந்து காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் கூடுதலாக திறக்க வாய்ப்புள்ளது. இதனால் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது என மத்திய நீர் வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். 


சுற்றுலா பயணிகளுக்கு குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது


இதனால் காவிரி கரையோரம் மாவட்ட நிர்வாகம் மீண்டும் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. காவிரி ஆற்றில் நீர்திறப்பு அதிகரிப்பால், ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு 40 நாட்கள் தடை விதிக்கப்பட்டிருந்து.


இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டது‌. தற்போது மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு ஒகேனக்கல்லில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை விதித்துள்ளது.